FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 28, 2012, 06:20:21 AM

Title: உறுதியாய் நம்புகிறேன் !
Post by: aasaiajiith on March 28, 2012, 06:20:21 AM


இறைவன்  என்பவன்  இருந்தால் -அவனுக்கு
இரக்கம்  என்பது  இம்மி  அளவேனும்  இருந்தால்
இன்றிருந்தாவது   இரு  நிலைகளிலும்  (உடல்நிலை ,மனநிலை )
இன்னல்கள் ,இடைஞ்சல்கள் ,இடையூறுகள்  ஏதும்  இன்றி
இளம்  கிழவி  இன்பமாய்  இளைப்பாற ( தூங்க  ) வேண்டும்  என்று
இன்றல்ல  நேற்றல்ல   தொன்று  தொட்டு  இறைஞ்சி  வருகிறேன்  இறைவனிடம் .
இறைவனிடம் , என்  இறைஞ்சல்கள் சென்றடைய 
இடை  இடையே  சிறிதாய் ,பெரிதாய்  பல  தடைகள்  போல  ?
இன்றுதான் , தடைகள் பல  கடந்து  ,இறைவனிடம்  அடைந்தது  போல
இறைஞ்சல்களுக்கு  நறும்  விடையை - எல்லாம்  வல்ல
இறைவனின்  அருட்கொடையை  இனிமையாய் , இன்பமாய்
இன்றும் , இனி  என்றும்  இளைப்பாறுவாய்  ! என 
இறுதியாய் ,அறுதியாய் ,உறுதியாய்  நம்புகிறேன்  !