மீராவின் கண்ணன்
(https://i.postimg.cc/Qx1DpmKZ/3847315-Meera-bai.jpg) (https://postimages.org/)
பொலிந்தொளிரும் சுடர் சிந்தும்
வேள்விழியது கண்டு யுகமானது
பீலி சூடிநிற் மயிர்க்குழற்சி
கோதி நீவிடும் நாளது யுகமானது
காரிருள் மொட்டவிழ்கும் மௌவல்
மணம் கமழும் திருமேனி மோதித்து யுகமானது
அம்பரம் விரித்ததென புஜஆகிருதிதனில்
புகல்கொண்ட நாளது யுகமானது
அந்திகாவலன் தோற்கும்
மாலவன் முகம் புலரிடக் கண்டு யுகமானது
ஆநிரை கூடிநின்
மதுரக் குழலினில் முயங்கி யுகமானது
யுகம்யுகமாய்
பிடவமென வாழும்
இக்கண்ணனின் மீரா
நாளது யுகமென நோற்கும்
அனிச்சமானாள்
[பி.கு: மயிர்க்குழற்சி - சுருள் முடி, மௌவல் - இரவில் மலரும் மரமல்லிகை, மோதித்து - முகர்ந்து, அம்பரம் - கடல்/வானம், அந்திக்காவலன் - நிலா, புலர் - உதித்தல், ஆநிரை - பசு கூட்டம், பிடவம் - ஒரு வகை மலர். மழைநாளில் பூத்து மறுநாளே கொட்டிப்போகும், அனிச்சம் - ஒரு வகை மலர், மென்மையான முகர்ந்ததும் வாடி விடக் கூடிய மலர்]