FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on December 17, 2018, 03:37:16 PM
-
வாழ்க்கை ஓடும் ஓட்டத்தில்..
மனங்களும் ..மணங்களும் .
சிதறி போன ....
நியாபகங்களின் சிதறல்களா?
நெஞ்சின் கனல்களை....
தீ மூடும் சிதைகளா?
ஒத்துப்போன நெஞ்சங்களின் ....
ஒளிக்கற்றை வீசும் பிம்பங்களா?
இல்லை.....
மோதும் எண்ணங்களின் ...
அலைவீச்சில் சரியும் நீர் குமிழ்களா?
சலனங்கள் சாரலில் சார்ந்து..
சங்கமிக்கும் ஆகாயவெளிகளா?
இல்லை....
நிஜங்களின் நிதர்ஷணத்தில் ...
ஊமையாகி போன உணர்வுகளா ??
கானகத்தை அரிக்கும் கரையான்களும்....
காலத்தை கரைக்கும் கணங்களும் ..
மறக்க நினைத்தாலும் .. மறைத்தும் .முடியாத ..
சில நினைவுகளை ....மரிக்க வைக்க ...
சில நட்புகளும் .... புது உறவுகளும் ...
இவை எல்லாம் நீடிக்குமா?
என்று தெரியவில்லை! ...புரியவில்லை !!
-
இக்கரைக்கு அக்கறையாய்
தோன்றும்எல்லாம்
சில நேரம் மாயையின் பிம்பங்கள் தான்
தாகத்தில்
கானல் நீர் தேடி சென்று
ஏமாறும் நெஞ்சம் உண்டு
முகமூடி என தெரிந்தும்
விரும்பி ரசித்திடும்
சில நேரம்
நம் விந்தை நெஞ்சம்
மறித்து போகாமல்
நம் மனதை மரித்து
போகாமல் செய்வது
நட்பின் மேல்
நாம் கொண்ட
நம்பிக்கை ஒன்றே !
-
ரிஷூ பேபி, உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த மாற்றங்களை சில நேரம் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். சில நேரங்களில் காலம் அதனை சரி படுத்தும். உறவுகள் என்றுமே தொடர்கதை தான்
-
மிக்க நன்றி ! ஜோக்கர் அவர்களே ! மற்றும் சிக்க்கு!
வாழ்க்கை ஓட்டத்தில்..ஏற்பட்ட எண்ண
ஓட்டங்களை இங்கே பதிவிட்டேன்!
தாங்கி பிடிக்கும் நட்புகள் இருக்கும்போது..
இனி என கவலை எனக்கு ...:D ..நன்றி மீண்டும்!