FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: gab on December 17, 2018, 02:24:46 PM
-
தொலைவிலிருந்தும்
அருகில் இருப்பதான தருணங்கள்
தொலைந்து போயிருக்கின்றன.
வெவ்வேறு தடங்களில் நின்றிருந்தாலும்
ஒரே எண்ணத்தில் இணைந்து நிற்கும்
நிலைகள் மறந்து போயிருக்கின்றன.
கால ஓட்டத்தில்
வெவ்வேறு பாதைகளில்
விரைந்தோடி கொண்டிருக்கும்
மனம், ஒரு கணம் நின்று
நாம்
சிரித்து, அழுது,
சண்டையிட்டு, சமாதானமுற்று,
துவண்டு விழும்பொழுது தோளென
தாங்கி நின்று,
உன்னத நிமிடங்களை பகிர்ந்த
கனவென மாறிப் போன காட்சிகளை
மீண்டும் ஒரு முறை
திரும்பி பார்க்க இறைஞ்சுகிறது.
காலம் என்பது முடிவில்லாததுதான்
அது போலவே நட்பும்...
இந்த
பிரிவு என்பது முற்றுப்புள்ளி
இடப்பட்டத்தல்ல
அருகில் சில புள்ளிகளை
மீண்டும் இடுவோம்...
-என்றும் நட்பின் நட்பை நேசிக்கும்
நான்
-
காதல் தோல்வியில் மட்டுமல்ல
நட்பின் பிரிவிலும் கவிதை பிறக்கிறது
தொடரட்டும் உங்கள் பயணம்
-
அடடா .....நட்பின் இலக்கணம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்
-
மற்ற எந்த வெறுமைகளை விடவும் நட்பினில் ஏற்படும் வெறுமை மிகுந்த துயரமானது தான் Gab. பேசி தீர்க்க முடியாத விஷயம் என்று ஒன்றுமேயில்லை. வெறுமை என்று தோன்றும் நேரத்தில் நாமே கூட அவர்களை அழைத்து உரையாடலாம். அப்புறம் வெறுமை கவிதைகள் எழுத வேண்டிய அவசியமிராது :)
-
Gabயே இப்புடி வெறுமையா உணரவெச்சு கவிதை எழுத வெச்ச பயபுள்ள யாரு புடிச்சு இழுத்துட்டு வாங்க :o மண்டைலேயே நங்கு நங்குனு நாலு கொட்டு கொட்டுவோம்... :o ::) :o