FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on December 16, 2018, 07:19:36 PM
-
அன்னையாகவும் தான்
எங்கிருந்து வந்தான்
என்று நான் அறியேன்
வந்தான் என் நண்பனான்
நட்பை எனக்கு புரியவைதான்
எதிர்பார்ப்பில்லா அவன் அன்பு
எப்போதும் கள்ளம் அவன் உள்ளம்
கபாடறிய அவன் சிரிப்பு
இதுவே அவன் அடையாளம்
அவன் பெயரை போலவே
என்னோடு எப்போதும்
பிரியமானவன் தான்
என் தனிமையில் எப்போதும்
தோளோடு தோள்கொடுப்பவன்
என் கரம் கோர்த்து வழிநடத்துபவன்
என் புன்னகைக்கு காரணம் அவன்
இன்று அவன் இப்பூமியில்
பிறந்து இருபத்து ஆறு வருடங்கள்
எனக்கு அவன் நண்பன்
அவனுக்கு நான் அன்னை இன்று
அணைக்க அன்னை இல்லை
என்று கலங்காதே நண்பா
உனக்காக நான் இங்கே
நண்பியாக மட்டும் இல்லை
அன்னையாகவும் தான்
-
தோழியே
அன்னையாக பெற்ற
நண்பா
உன்னை விட
அதிர்ஷ்டசாலி
இவ்வுலகில் உண்டோ :) :)
God Bless You... Happy brithday to priyamana nanba :) :)
-
உன்னை அன்னையாக பெற அவன் என்ன புண்ணியம் செய்தேனோ என் தோழியே!!!
அன்னை என்று ஒரு சொல்லில் உன் அன்பை வெளிப்படுத்தியுள்ளாய் !!!
அன்னை என்பது அன்பின் காவியம் !!!
கள்ளமில்லா உள்ளம் கொண்ட ஓவியம் கடவுள் உயிருடன் வாழ்வதே அன்னையின் வடிவில் தான் என் தோழி !!!
நல்ல கவிதை