FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on December 13, 2018, 08:23:28 AM
-
வெறுப்பின் நகங்கள்
வெறுப்பின் நகங்கள்
ஒரு கத்தியின் முனை போல்
கூர்மையானது
அது முகம் தெரியாதவரின்
நியாயமான காரணிகளை
கிழித்தெரியக் கூடியது
வெறுப்பின் நகங்கள்
விஷம் தோய்ந்த
அம்பின் வீரியம் கொண்டது
அது
ஆயிரம்கால சந்தோசங்களை
கணத்தில்
சிதைத்து விடக்கூடியது
வெறுப்பின் நகங்கள்
கொழுந்து விட்டு எரியும்
தீயின் நாக்குகளை கொண்டது
நொடியில்
பிரியமானவரின் மனதை
பொசுக்கி வதைத்துவிடக்கூடியது
வெறுப்பின் நகங்கள்
மாயவலை போன்றது
உங்களை உள்ளிழுத்து
உற்றவரை துன்புறுத்தச் செய்து
முடிவில்
உங்களையும் அது வீழ்த்தும்
வெறுப்பின் நகங்கள்
உலகை அழிக்கும்
போர் போன்றது
இறுதியில் மிஞ்சப்போவது
நீங்களும் கூட இல்லை
புரிந்துகொள்ளுங்கள்
வெறுப்பென்பது
கொடிய மிருகத்தின்
கூரிய நகங்கள்
-
tamizhachee chikuuu mam , wow... ungaloda kavithai varigal .. english professor ah erunthuttu ,tamizh pulamai aahaa ohoo . hmm , you like namma ooru tamizhachee thanga pandiyan ( sumathi mam ) mathuri kalakkurenga , she also english professor , ungal pane thodarattum ..vazhthukkal chikuu
-
பேரன்பும் நன்றியும் Grandmax.. எனக்கு சுமதி அக்கா ரொம்ப பிடிக்கும். She is my inspiration. பாராட்டுக்கும் ஊக்கப்படுத்துவதற்கும் நன்றி grandmax :)
என்னை சிக்குன்னே கூப்பிடுங்க mam எல்லாம் வேண்டாம் :)