FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on December 09, 2018, 04:15:09 PM

Title: இப்படியாக வாழ்கிறோம்
Post by: Guest 2k on December 09, 2018, 04:15:09 PM
இப்படியாக வாழ்கிறோம்

எப்பொழுதும் மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு திரிகிறோம்
நிறைகளை மறந்து குறைகள் எண்ணி
மருகுகிறோம்
நமக்கென ஒரு வாழ்வு இருக்கையில்
பிறரின்
வாழ்க்கையை வாழ்ந்திட துடிக்கிறோம்
நினைவுகளை உருவாக்கி
நினைவுகளை உதிர்க்க தயங்குகிறோம்
ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்கிறோம்
பின்
கூட்டத்தினிடையே தனித்தலைகிறோம்
ஒரு உறவை தூர வைக்கிறோம்
ஒரு உறவை உதறி எறிகிறோம்
வார்த்தைகளை குறைத்துக் கொள்கிறோம்
வார்த்தைகளாலேயே சுடுகிறோம்
பொய்களை தூக்கி சுமக்கிறோம்
அசூயையின் தடங்களில்
வீழ்ந்து
கண்ணீர் உகுக்கிறோம்
காயப்படுத்துகிறோம், காயப்படுகிறோம்
வன்மத்தில் உண்மைகளை மறுதலிக்கிறோம்
குற்றவுணர்ச்சி கொள்கிறோம்
தோற்றுப் போகிறோம்
இப்படியாகவே வாழ்ந்து முடிக்கிறோம்
Title: Re: இப்படியாக வாழ்கிறோம்
Post by: Guest on December 09, 2018, 04:35:15 PM
அப்படியே இதையும் சேர்த்து கொள்ளவும்

சிரித்துக்கொண்டேயிருப்பதால்
மகிழ்ச்சியாய் இருப்பதாகவும்
கண்ணீரோடேயிருப்பதால்
கலங்கிக்கொண்டேயிருப்பதாகவும்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்....
.
Title: Re: இப்படியாக வாழ்கிறோம்
Post by: Guest 2k on December 09, 2018, 07:56:44 PM
ஹ்ம்ம் உண்மை தான் நண்பா