FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 09, 2018, 01:37:36 PM

Title: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest on December 09, 2018, 01:37:36 PM
நெஞ்சுக்கு மிக நெருக்கமாய் கொண்டலைகிறேன் உன்னை

இமைக்காத விழிகொண்டுன்
தெளிந்த முகம்நோக்கலில்
கழியும் பொழுதுகளில்
இளைப்பாறப் பழகிவிட்டிருக்கிறது மனம்.

உன் கதகதப்பிற்கு
பரிச்சயப்பட்ட விரல்களுக்கு
உன்மேனி தொட்டுணர்ந்து
ஸ்பரிசம் நுகர்தல்
அனிச்சையாகி
காலங்கள் ஆகி இருக்கிறது

சுதாரிக்காத ஒரு பொழுதில்
என் கைநழுவுகிறாய்..
பதறித்துடித்து மீண்டும் கைக்கொள்ள முயலுகிறேன் உன்னை..

இயலா நிலையொன்றில்
எனை வீழ்த்தி
சுயம் விழுந்து நொறுங்குகிறாய் சில்லுசில்லாய்...

இன்னும் பத்திரமாய் பாதுகாத்திருந்திருக்கலாம்
மெல்லிய மனம் கொண்ட
மெல்லிடையாள் உன்னை

அன்றலர்ந்த மலர் போலுன்னை மீட்டெடுக்கும் வரையில்
இனி ஆதங்கம் மட்டுமே
சூழ்ந்திருக்கும் என்னை

குழப்பங்கள் தாண்டியும்
யோசித்தே இருக்கும் மனம்
உன்னை மீட்டெடுக்கும்
உத்திகளை..
மீண்டு நீ மீண்டும் வரும்வரை.

உன்னை மீட்டெடுத்தல்
என்பது எனக்கானது.
நீ எனக்கானவள்...

#கைத்தவறி விழுந்து உடைந்து போன
கைப்பேசியின் சாக்கில் காதலோடு ஒரு கவிதை(?)😂😂
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: SaMYuKTha on December 09, 2018, 02:36:51 PM
அதானே பாத்தேன்... லவ்  கிவ் வந்திருச்சோனு ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்...
போன் போச்சா ;D ;D உங்க இம்சை தாங்காமே அதுவே கீழ விழுந்து suicide பண்ணிருக்கும் ::) ::)
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest 2k on December 09, 2018, 02:57:06 PM
மனுஷிய ஒரு பீலீங்க்ஸ் பண்ண விட மாட்டீங்களே.. 😂கைபேசியையே கட்டிக்கொண்டு அழவும் 😑
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest 2k on December 09, 2018, 03:11:06 PM
சம்யூ பேசமா ஜோடி படத்துல இருக்கிற மாதிரி இவர கட்டிப்போட்டு காதல் படமா பார்க்க விடுவோமா 😂😂
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest on December 09, 2018, 03:39:08 PM
@ saami  😂😂 உன் கூட எல்லாம் சேர்ந்த என்ன ஆகும்னு என்ன பார்த்து மத்தவங்க தெரிஞ்சுகட்டும்..

            உன் ஷாக் ல இடி விழ.....அப்படியே உன் மேல விழ (already இடி விழுந்த காக்கா போலதான் இருக்க)
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest on December 09, 2018, 03:43:16 PM
@ சிக்கு   கைபேசியை கட்டிக்கொள்ளாமல் நன்றாக பீலிங்ஸ் செய்யவும்😎

அப்படியே அந்த படத்த  first நீங்களும் சம்யுக்தாவும் பார்த்து கரை சேரவும்...


Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest 2k on December 09, 2018, 03:51:03 PM
நண்பா மொபைல்ல கட்டிக்கிட்டு பீலீங்ஸ் பண்ணுங்கன்னு நான் சொன்னது உங்களைத் தான். நானெல்லாம் விடிவி, நீதானே என் பொன்வசந்தம் பார்த்து பார்த்து கரையேறாம கிடக்கிறேன் 😷
Title: Re: எதுவாகிலும் அது நீயாகவே.........
Post by: Guest on December 09, 2018, 03:57:37 PM
@  chikku 😂 ஆஹா!!   Right...right..

 நீதானே என் பொன்வசந்தமா??🤔   அப்போ பேசினால் சரி ஆகிடும் .. சீக்கிரமா பேச கடவ.....