FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: DoRa on December 07, 2018, 03:36:34 PM

Title: முளைக்கீரையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்..
Post by: DoRa on December 07, 2018, 03:36:34 PM
முளைக்கீரை
(https://i.postimg.cc/8z7y5nr7/1544167882-5616.jpg) (https://postimages.org/)

 முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை  மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய  நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும். முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய  நோய்கள் குணமாகின்றன
 
சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப காய்ச்சலை தணிக்க வல்லது.

 முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும்.
 
முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
 
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம்  போன்றவை சரியாகும்.
 
இளைத்த உடம் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைப் போக்கும், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
 
கண் எரிச்சலைப் போக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை  குணமாக்கும் தன்மை கொண்டது.

(https://i.postimg.cc/zfsWjxBP/1500021371-0091.jpg) (https://postimages.org/)