FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on December 05, 2018, 05:17:38 PM

Title: புத்தனின் புன்னகை
Post by: Guest 2k on December 05, 2018, 05:17:38 PM
புத்தனின் புன்னகை

(https://i.postimg.cc/yxVkBsrV/images-1.jpg) (https://postimages.org/)


எல்லாவற்றையும் துறந்து
தனியே பயணிக்கவென
முடிவெடுத்து
தெருவில் கால் பதித்த
புத்தனுக்கு
முன்னறிமுகமற்றவர் சிறு
புன்னகையை வீசி செல்கிறார்
கண்களில் தாங்கி நிற்கும்
ஒவ்வொரு கணமும் கனம் கூடிப்போன
அப்புன்னகையை
எந்த பக்கம் துறந்து செல்வதென்ற பெருங்குழப்பத்தின் முடிவில்
துறக்கவியலா அப்புன்னகையை
தானே ஏந்தி நிற்கிறான்

Image Source: Google
Title: Re: புத்தனின் புன்னகை
Post by: Guest on December 05, 2018, 07:06:02 PM
அருமை ....

இதை படித்தும் எப்பொழுதோ படித்த ஒரு வரி  நினைவில்...

ஆசையே துன்பத்திற்க்கு காரணம்
என்ற புத்தனும்
ஆசையுண்டான் - ஆசையே படுதல்
கூடாதென்று.............

#புத்தனின் புன்னகை :)
Title: Re: புத்தனின் புன்னகை
Post by: Guest 2k on December 05, 2018, 07:14:26 PM
ம்ம்ம்
// ஆசையுண்டான் - ஆசையே படுதல்
கூடாதென்று :)

பேரன்பும் நன்றியும் நண்பா
 
Title: Re: புத்தனின் புன்னகை
Post by: joker on December 06, 2018, 06:11:11 PM


புத்தனின் புன்னகை கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சிக்கு

எனக்கு தோன்றிய சிறு கிறுக்கல் இதோ


வறுமை
பாய் போட்டு
படுத்திருக்கும்
வீட்டில்
ஒருவன்

யாரோ சொன்னார் என
ஆசை கொண்டு
வாங்கி வந்தான்
சின்ன சிறிய
சிரிக்கும் புத்தன்
சிலை

அவர் சிரிப்பை கண்டால்
வறுமை மாறும் செழுமை
பொங்கும் என நினைத்து
தினம் தினம் கண்விழித்தான்
சிலையின் முன்

நாட்கள் செல்ல செல்ல
சிரிக்கும் புத்தன் சிலையும்
அழுவதாகவே
தோன்றுகிறது
அவனுக்கு

புரியாமல் யோசித்தான்
இது புத்தனின் குற்றமா ?
இல்லை
இவன் ஆசையின்
குற்றமா ?
Title: Re: புத்தனின் புன்னகை
Post by: Guest 2k on December 06, 2018, 06:54:04 PM
ஆஹா மிக்க நன்றி ஜோக்கர். அழகான பதில் கவிதை. அன்புக்கு நன்றி :)