FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 01, 2018, 08:13:06 PM

Title: அன்பு !
Post by: joker on December 01, 2018, 08:13:06 PM
அழும் குழந்தைக்கு
ஊமை தாய் எப்படி
ஆரிராரோ தாலாட்டு பாடி
தூங்க வைத்திடுவாள் ?

உலகம் காண முடியா தாய்
எப்படி தன்  குழந்தைக்கு
நிலவை காட்டி
சோறூட்டிடுவாள் ?

காது கேட்கா தாய்
எப்படி
இடி இடிக்கும் பொழுதில்
தன் குழந்தையின்
காதை மூடிடுவாள் ?

நினைக்க நினைக்க
நித்தம் ஒரு கவலை
மனமெங்கும்
குழப்பம்

யார் செய்த தவறென
யார் மீது பழி போட

தாய் சேய் பந்தம்
பற்றி சிந்தித்தது
என் மனம்

வெளிச்சத்தில்
கண்மூடி இருக்க
யாரும் அறியாது என எண்ணி
பாலை ருசித்திடும்
பூனை போல

எல்லாம் சரியாய் இருந்தும்
இதெற்கெல்லாம் காரணம்
அன்பு ஒன்றென
அறியாமல் வளர்கிறோம்

அன்புக்காக ஏங்கும் ஒரு கூட்டம்
ஒருபுறம் அனாதை இல்லத்தில்
அன்பை காட்ட ஆளில்லாமல்
ஒரு கூட்டம் முதியோர் இல்லத்தில்

முரண்பட்ட இதயங்களை
படைப்பதே இறைவனின்
வேலையாயிற்றோ ?

இரவின் மடியில்
சாய்ந்திருக்கும் நேரம்
கைபேசியின் ஒளியால்
ஒளிர்ப்பிக்காமல்
கொஞ்சம் தாயின் மடியில்
தலை சாய்த்து கேளுங்கள்

உங்களிடம் சொல்ல
அவள் சேர்த்துவைத்திருக்கும்
அன்பின் பொக்கிஷ கதைகளை

காலம் கடந்தபின்
ஏங்கி
கிடைக்காமல்
நிற்கதியாய் நிற்கையில்
வருந்தி பயனில்லை

அன்பு,
அது காற்றுக்கும்
இலைகளைக்கும்
இடையில் இருக்கும் பந்தம் போல
உணரத்தான் முடியுமெனில்
உணருங்கள்
உணர்த்துங்கள்
தோழர்களே !

Title: Re: அன்பு !
Post by: KaBaLi on December 01, 2018, 08:21:23 PM
அருமையாக எழுதி எல்லாருக்கும் உணரவச்சுருக்கீங்க. இருக்குறவங்க பீல் பண்ணலாம் அல்லது சொல்வதை கேட்கலாம் ,
இல்லாதவர்கள் யாரு மடியில் படுத்து கேட்பாங்க 😢😢..

Title: Re: அன்பு !
Post by: joker on December 01, 2018, 08:51:38 PM
அன்புக்காய் ஏங்கும் உள்ளம் இங்கு பல உண்டு
அன்பை காட்டிடும் உள்ளமும் இங்கு பல உண்டு
பொக்கிஷங்களை நாம் தானே தேடி செல்ல வேணும் சகோ