FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 01, 2018, 03:36:03 PM

Title: அவள்-காலை-பனி
Post by: Guest on December 01, 2018, 03:36:03 PM
புரண்டு புரண்டு படுத்தேன்
இன்னும் சூரியன் வரவில்லை
சாம்பல் பூத்த காலை பொழுது
நீங்காமல் கிறங்கடித்தது...

அவளை பற்றிய நினைவுகள்
தடை படும் என்பதால் இன்னும்
கண்விழிக்க பிடிக்கவில்லை....

இன்று முழுக்க கூட இப்படியே
கிடந்நது அசைபோடலாம்
அவ்வளவு விஷயங்களை
சுமந்தவள் அவள்....

ஒவ்வொரு நாளும் அவளை
புதிதாக கண்டு புதிப்பித்து
கொள்வது என் வழக்கம்...

எப்படி நேசித்தாலும் என்
அளவுக்கு அவளால் அன்பு
செலுத்த முடிவதில்லை என்பதே
அவள் புகார்...

உன்னை என்ன செய்ய..?!!

நான் ஏன் அவளை தேர்ந்தெடுத்தேன்?
என்னை ஏன் அவள் ஏற்றுக்கொண்டாள்?
என்பது பற்றி ஒரு நாளும்
பேசியதில்லை...

மனம் முழுவதும் தேக்கி
வைத்த அவ்வளவு அன்பும்
அவளிடம்தான் பீறிட்டு வெளிபட்டது
அதை தாங்ககூடிய வலிமை
படைத்தவளாக அவள் இருக்கிறாள்...

அமைதியை தரும் உறவுதான்
இன்பத்தை தரும்
என் தனிமையில் கூட
உணர முடியாத அமைதியை
அவள் அண்மையில் உணர்கிறேன்.....

மேகம் மழை துளிகளால்
கனத்திருப்பதை போல் -அவளும்
அளவற்ற அன்பை சுமந்து
என் மீது பொழிந்துகொண்டே
இருக்கிறாள்....

இப்பொழுது அவளும் என்னை
போலவே கண்களை மூடி
என் நினைவில் லயித்திருப்பாள்...

அவள் வீட்டு ஜன்னல்
வழியாக தீண்டும் குளிர்காற்றில்
என்னை உணர்வாள்..

குளிரின் படபடப்பில் அவளை
எதிர்நோக்கியிருக்கும் என்னை
உணர்வாள்...

தன் தனிமையில்
என் தனிமையினை உணர்ந்து
கொள்வாள்...

நானென்று எண்ணி தலையணைக்கு
ஆயிரமாயிரம் முத்தங்கள்
கொடுப்பாள்...

ஆழ்ந்த கதகதப்பில்
நான் கண்விழிப்பேன்......


Title: Re: அவள்-காலை-பனி
Post by: Guest 2k on December 01, 2018, 05:15:07 PM
அதி அற்புதம். பனிக்கேற்ற கதகதப்பு இந்தக் கவிதை நண்பா :)