FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 30, 2018, 04:18:45 AM

Title: ★நாணயங்கள்★
Post by: Guest on November 30, 2018, 04:18:45 AM
முன்பு நான்
நாணயத்தை பார்த்ததில்லை.
ஆனால் முன்பே
நீங்கள் நாணயமானவர்கள்.

அன்றொரு நாள்
நாணயத்தை கண்டேன்.
அன்றும்
நீங்கள் நாணயமானவர்கள்.

பிறிதொரு நாள்
நாணயத்தை கையில் எடுத்து
இரு பக்கத்தையும் பார்த்தேன்.
அப்போதும் கூட
நீங்கள் நாணயமானவர்கள்.

உங்கள்
நாணயங்கள் பிடித்துப் போகவே
தேடித் தேடி சேகரித்தேன் நாணயத்தை.

இதோ.. யாசகம் கேட்டவனுக்கு
அந்நாணயங்களை வாரி வழங்கியதும்
முகத்தில் வீசியெறிந்து சொல்கிறான்
இந்நாணயங்கள் செல்லாக்காசென.

எனக்குத் தெரியும்.
இனியும் கூட
நீங்கள் நாணயமானவர்கள்.
Title: Re: ★நாணயங்கள்★
Post by: Guest 2k on November 30, 2018, 07:28:11 AM

நண்பா வாவ்வ்..இது நம் ஒவ்வொருத்தருக்குமே பொருந்தும் நண்பா. நாம் விலைமதிப்பற்றது என நம்பும் சிலர்/சில விசயங்கள் யாரோ ஒருவருக்கு செல்லாக் காசு தான் :)