FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 27, 2018, 07:04:23 PM
-
ஆழம் கொண்ட கடல் நீ..
எனக்கு தெரிந்ததெல்லாம்
மேலோட்டமான பேரமைதியும்
ஆர்ப்பரிக்கும் சில அலைகளும் மட்டுமே.
முத்துகுளிப்பதாய் மூச்சடக்கி
மூழ்க முயலுகையில்
ஆழம் உணர
இடைவெளிகளில் மிதக்கிறேன்..
ஆழங்களின் பரிணாமத்தை
அனுமானங்களில்
அளவீடு செய்துகொள்கிறேன்.
அச்சமூட்டும் பேரமைதியில்
தத்தளித்து நகருகையில்
இயலாமை உணர்த்தி
துரத்த துவங்குகிறது சுயம்.
நீ வசப்படா சமுத்திரம்
நான் சாமான்யன்.
-
நீ வசப்படா சமுத்திரம், நான் சாமான்யன். என்னவோ பண்ணுது நண்பா இந்த வரிகள் <3
-
Chikku பின்னூட்டங்களால் மனதை வருடுவது உங்களுக்கு மட்டுமே கைவந்த கலை😂
-
நண்பா இது அன்பா சொல்ற மாதிரி தெரியலையே. நக்கலா சொல்ற மாதிரில இருக்கு :D
-
சாபங்களே சில நேரங்களில் ஆசீர்வாதமாகுமாம் அன்பினில்... எனில் நக்கலும் ?!😎