FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 27, 2018, 03:22:33 AM
-
இன்னும் தூங்காமல்
காத்திருக்கும் தங்கைகளுக்கு.....
.
அயர்ந்து தூங்குங்கள்
உங்களுக்கான காதல் இளவரசனை
இறைவன் உற்ற நேரத்தில்
அறிமுகம் செய்வான்....
.
உன் அருகில்
படுத்திருக்கும் அம்மாவை
கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிரு
படுக்கைக்கு செல்லும் கடைசி
நிமிடத்தில்கூட பத்து
பாத்திரம் தேய்த்து நாளைய
உனக்கான தேவைகளை
யோசித்துக்கொண்டு
மனதில் போட்டு பூட்டி வைத்து
பாதுகாத்திருப்பாள்...
.
தூங்குவதுபோல்
நடித்துக்கொண்டிருக்கும்
உன் உச்சி முகர்ந்து
அவள் வணங்கும் கடவுளை
வேண்டிவிட்டு தூக்கம் எனும்
தற்காலிக மரணத்தில்
நம்பிக்கையோடு வீழ்ந்திருப்பாள்......
.
நீ நாளை புத்தாடை அணிவதன்
காரணமறியாள் - நீ
தூக்கம் கலைக்கும் தேவையறியாள்
நீ பொய் சொல்லும் விபரமறியாள்
நீ தனித்திருக்கும் ஆண் பற்றியறியாள்
நீ வழக்கம்போல் சென்று
நீ திரும்பி வரும் நேரம் பற்றி
யோசித்தறியாமல்
உன் மீது நம்பிக்கையை மட்டும
கொண்டவளாய் தூங்கிக்கொண்டிருக்கும்
தாயை லேசாய் கண் விரித்து பார்...
.
ஒரு நாள் உன் தாயை
உச்சி முகர்ந்து பார்
பேய்களின் நிழல்கூட
எட்டிப்பார்த்திடா...