FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 27, 2012, 12:13:12 AM

Title: கல்லூரி தாயே..!
Post by: Jawa on March 27, 2012, 12:13:12 AM
கல்லூரி தாயே
உந்தன் மண்ணில்
நாங்கள் மலர்ந்தோம்
உன்னாலே தானே
நாங்கள் புதுமையாய் பிறந்தோம்

வகுப்பறை எனும் கருவறையில்
நான்கு ஆண்டு வாழ்ந்தோமே
உன்னை பிரியும் நேரத்தில்
குழந்தைபோல அழுகின்றோம்

புன்னகைத்த முகங்கள் எல்லாம்
பசுமையாக மனதில் நிற்கும்
திட்டித் தீர்த்த சில முகமும்
புன்னகைக்கும் பின்னாளில்

நட்பு என்ற கோட்டை கட்டி
வாழ்ந்துவிட்டோம் உன்னாலே
கருவறைபோல் எங்கள் நட்பை
புனிதமாக காத்திடுவோம்...!
Title: Re: கல்லூரி தாயே..!
Post by: suthar on March 27, 2012, 12:41:26 PM
10 aandirku piragu kalloori sendra anubavam ellam pasumai ninaivugalaga. Ngabaga paduthiyatharku nandri.