FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 27, 2012, 12:01:56 AM

Title: "குப்பைதொட்டியிலிருந்து குரல்........."
Post by: Jawa on March 27, 2012, 12:01:56 AM
பெண்குழந்தை என்பதாலா...?
என்னை குப்பைத்தொட்டியில் போட்டாய்...!
கருவறையில் வளர்ந்த எனக்கு
தெருமுனையில் தானா தேவருலகம்;
பாதையில் போட்டால்
பார்ப்பவர் கண்
பகலவனாய் சுடும் என்பதாலா.....?
குப்பைத்தொட்டியில் போட்டு
குளிரவைத்தாய்.......!

கொடுமை என அழவில்லை
கொட்டாதே குப்பையென அழுகிறேன்
பால்சுரந்த மார்பு வலிக்கவில்லையா...?
எனக்கு இல்லாமல் யாருக்காய்
அதை சேர்த்துவைக்கிறாய்...?
மடிமீது இன்னும் படுக்கவில்லையே...?
அதற்குள் என்ன அவசரம்
அம்மா........!
குப்பைத்தொட்டிக்கு குடிமாற்றிவைத்தாய்.....?
கருவறையை காலி செய்யத்தான்
காத்திருந்தாயோ இத்தனை நாள்..?
இறைவனிடம் வெண்டிக்கொள்கிறேன்
வேண்டாம் உனக்கு இன்னொரு
பெண் குழந்தை என..?
Title: Re: "குப்பைதொட்டியிலிருந்து குரல்........."
Post by: suthar on March 27, 2012, 12:51:30 PM
Pillai illai ena enguvor palar iruka angu sendru en piranthaai sella magalae

nice lines.

pen ilatha kurai arinthavarku matumey therium. Jawa
en veetil sagothari illai ena engiya naatkal pala undu

theruvoram vilaiyadum alathu sellum pen pillaigalai paarthu nam veetu pillai aaga irukatha ena engiya naatkal undu.