FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 23, 2018, 03:30:31 PM
-
இணைவதற்காய் பிரிதலும்
இணைந்து பிரிதலும்
என பிரிதலிலும் வகைகள்
இருந்திருக்கும்..
நாம் இணையை பிரிந்தவர்கள்..
ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் அழுத்தத்தை
அணைகட்டி தடுத்த
ஒரு உணர்வுணரும் பொழுதில்
பிரிதல் களைகிறோம்.
கொள்ளளவை தாண்டிய வெள்ளமாய்
பொங்கிவழியும் அன்புக்கு மதகுகளை
மீறுதல் ஒன்றும் இயலாததில்லை..
இறைக்கு கட்டுப்படும் இயற்கை போல்
ஆர்ப்பரிப்புகள் மறைத்து
அமைதி கொள்கிறது
கட்டுண்ட நதி.
நதிகள் கடலுக்கானவை..
நம்மில் யார் நதி?. யார் கடல்?..
ஆதங்கங்களையும்
தவிப்புக்களையும்
குழப்பங்களையும் தாண்டி
சிரித்தே கடக்க வேண்டியிருக்கிறது
அன்பின் பேரிழப்புகளை...
-
Wonderful நண்பா!
-
NICE NAtpu keep it up 8)