FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on July 25, 2011, 11:03:19 PM

Title: முதுமையை அதிகரிக்கும் கம்ப்யூட்டர் பணி!
Post by: kanmani on July 25, 2011, 11:03:19 PM
இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.

இத்தகைய பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்வார்கள்.ஆனால் இதற்கு உண்மையான குற்றவாளி யார் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
Title: Re: முதுமையை அதிகரிக்கும் கம்ப்யூட்டர் பணி!
Post by: Global Angel on July 26, 2011, 12:27:29 AM
naangalumthan chat panram loooooooooooooooooooooooooooong time ethum aagumooo ::) ::) ::) ::) ::) ::)