FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 20, 2018, 02:16:27 AM
-
உடல் களைத்து உயிர் சோர்ந்து
வீடு வரும் ஒரு தினத்தில்
உன் அருகாமை
பிணிநீக்கியாய் ஆகின்றது..
நெஞ்சோடு அணைக்கும்
உன் ஸ்பரிசத்தால்
இதயத்தை தழுவி இதம் கொள்ளச்செய்கிறாய்.
உன் வாசம் உணரும் ஒரு நுகர்தலில்
இதயத்தை சூழ்ந்திருந்த குழப்பங்கள்
ஆவியாகிப் போனபின்னே
அமைதி சூல்கொண்ட இதயத்தில்
அடர்த்தியான உன் அன்பால்
பேரன்பாய் சூழ்ந்து கொள்கிறாய்...
'என்னை உபயோகிக்கிறாய் நீ'
எனத்தோன்றும் ஒரு தினம் உண்டாகுமெனில்
'நீ காட்டிய அன்பிற்கு
கொஞ்சமேனும்
தகுதியானவன் தான் நான்'
என ஆற்றிக் கொள்ளும் மனம்..
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
அன்பு செய்யும் அன்பு
நீ..
-
super nanba nalla very good morning nanba :)