FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: regime on November 19, 2018, 10:31:40 AM

Title: இதயத்தின் வலி..!
Post by: regime on November 19, 2018, 10:31:40 AM
இதயத்தில் மறைந்து இருக்கும்
உன் காதலை போல..!

உன்னை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை..!

உன்னை நினைக்கும் போது
கவிதையாக வருகிறது..!

உன்னை வெறுத்ததாக சொன்னாலும்
மனம் என்னை வெறுக்கிறதே தவிர
உன்னை வெறுக்கிதில்லை..!

உன்னை மறக்க முயன்றும் என்னால்
நினைவை மறக்க முடியவில்லை..!

விழிக்குள் பதிந்து இருக்கும் உன்
உருவத்தை கண்ணீரால் கூட
அழிக்க முடியவில்லை..!

கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்
கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை
நினைக்க விரும்புகிறேன்..!

ரோஜாவாக பிறக்க வேண்டிய நான்
முள்ளாய் பிறந்துவிட்டேன்...!
Title: Re: இதயத்தின் வலி..!
Post by: joker on November 19, 2018, 11:45:24 AM
சில நேரம் காதல் மறக்கும் தருணம்
கவிதை பிறக்கும் தருணம்

காதல் கிடைத்ததோ இல்லையோ
ஒரு கவிதை கிடைத்தது

வாழ்த்துக்கள் THOR
Title: Re: இதயத்தின் வலி..!
Post by: gab on November 19, 2018, 01:02:44 PM
கவிதை எழுதும் உங்களுடைய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் . காதல் கவிதைகளை இலகுவாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் தோர்.
Title: Re: இதயத்தின் வலி..!
Post by: regime on November 19, 2018, 08:02:54 PM
ungaludai valthukal ku nadri machi GAB AND JOKE  MACHI