FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 25, 2012, 06:15:27 PM
-
எழுத வேண்டும் எனும் எண்ணத்தோடு
எழுதுகோல் கொண்டு எழுதிட அமர்ந்தால்
எழுதிட எதுவும் ஏதுவாய் அமையவில்லை
எழுத்துகளுக்குள்ளும் ,எல்லைகளுக்குள்ளும் கட்டுப்படா
எங்கள் அன்பையும் , எழில் நிறைந்த காதலையும் தவிர
என்று தன் எண்ணத்தின் எதார்தத்தினை
எதார்த்தமாய் அவர் (சிறப்பு இயற்கை ) பதித்த பதிப்பினை
என்னவோ ஏதோ என நினைத்து அனர்த்தமாய் தான் கருதினேன்
எழுத எதுவும் தெரியாததாலே எதுவும் தோன்றவில்லை
என்று எத்தனித்திருந்தேன் ..
எத்தனித்ததோடு நில்லாமல் அப்பதிப்பின் வரிகளின் வீரியம்
என்னவென்றரியாமல் எட்டியே இருந்தேன் ..
என்னவென்று தெரியவில்லை அனர்த்தமாய் தெரிந்த அவ்வரிகள் பதிந்த பதிப்பே
எனக்கு ஆத்மார்த்தமாய் தோன்றிடும் அதிசயம் எங்கனம் ??
எத்தனை இயல்பு
எத்தனை எளிமை
எத்தனை லயிப்பு
எப்படித்தான் முடிகிறதோ இப்படி இலகுவாய் வரி சமைக்க
எனக்கும் இப்படியே இப்படிதான் வரி பதிக்க விருப்பம்
எத்தனை நாள் முயன்றும் இதோ இன்று தான் திருப்பம்
என்னவளோ குரல் வழியே ஸ்பரிசம் தருவாள்,அவளுக்கு
எனக்கு வரி வழியே ஸ்பரிசம் அதை பரிசாய் தர
இலகுவாய் எழுதும் ,இவள் வழியே எளிய வழி ....
இனிய வழியும் கூட ...
-
எப்படித்தான் முடிகிறதோ இப்படி இலகுவாய் வரி சமைக்க
எனக்கும் இப்படியே இப்படிதான் வரி பதிக்க விருப்பம் ( kavignare ungalai vida ilaguvai vari samaika yaralum mudiyathe
என்னவளோ குரல் வழியே ஸ்பரிசம் தருவாள்,அவளுக்கு
எனக்கு வரி வழியே ஸ்பரிசம் அதை பரிசாய் தர
இலகுவாய் எழுதும் ,இவள் வழியே எளிய வழி ....
இனிய வழியும் கூட ...( kural sparisam ithai keta udan enaku bharthiyar paadiyathu than nabagam varugirathu inba thean vanthu paaiuthu kaathinilenu paadi irupar epdi than paaithatha kavignare antha kuraluku sonthakari yaru enakum sonal en kaathilum thean paaiume arumaiyana kavithaigal ungal tamil ai vimarsika varthaigalai thedi kalaithe poyiten arumai arumai arumai