FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on July 25, 2011, 10:47:47 PM

Title: பழங்களும் மரு‌த்துவ குணங்களும்
Post by: kanmani on July 25, 2011, 10:47:47 PM
பழங்களும் மரு‌த்துவ குணங்களும்

கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.

பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். ரஸ்தாளி வாழை கண்ணிற்கும் நல்லது.

பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.

பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.

மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.

திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.

எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் போக்கும்.

செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.

அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குணமாகும்.

அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


 
Title: Re: பழங்களும் மரு‌த்துவ குணங்களும்
Post by: Global Angel on July 26, 2011, 12:29:30 AM
arumayaana pathivu... nanri kannumani ;) ;)