FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SaMYuKTha on November 08, 2018, 09:17:19 PM
-
விடை தெரியாமல் உழல்கிறேன்
காரணம் அறிய விழைகிறேன்!!!
எப்பொழுதும் தெளிந்தஓடையாய்
நிச்சலனமாய் போகும் என் பயணம்
இப்பொழுது குழம்பியகுட்டையாய்
சோகங்களையே பரிசளிக்கின்றதே!!!
சோலைவனமாய் பூத்துக்குலுங்கிய உலகமோ
மறக்க முடியாத நெஞ்சை அமிழ்த்தும்
நினைவுகளை தந்து
மனதை வாட்டுவது ஏனோ???
ஆதரவாய் பற்றிய கரங்கள் யாவும்
ஒருநொடியில் உதறி எறிய
வெறும் விலகல்களையும் ஏமாற்றங்களையுமே
வலியுடன் சுமந்து திக்கற்று
விழிபிதுங்கி நிற்கின்றேனே…
நெருக்கங்கள் அதிகம் ஆகும் வரை
நீங்காமல் இருக்கும் அன்பே
நெருங்கி பழகிய பின்
தூர விலக செய்து
உணர்வுகளை புதைத்து
நீங்கிய காரணம் என்னவோ???
அன்பு பாராட்டுவது அத்தனை கொடுஞ்செயலா???
ஒவ்வொரு முறையும் உதாசீனங்களால்
நொறுங்கி வீழும்போதும்
மனமோ சத்தமில்லாமல்
வாய்விட்டு கதறி உணர்த்துகிறதே
அநாதையாய் இருப்பதும் நன்றன்றோ???
-
சம்யூ, நகுலனின் நான்கு வார்த்தைகளில் ஒரு கவிதை இருக்கிறது,
"எனக்கு
யாருமில்லை
நான்
கூட.."
உங்களுடைய கவிதைய படிக்கும்பொழுது இந்த கவிதை நினைவிற்கு வந்தது. நாமெல்லாம் அன்பிற்கு/அன்பினால் கட்டுடுண்ட அடிமைகள். மீள்தல் கடினம். எனினும் மீளத் தான் வேண்டும்.
-
மகளே,
காலம் கொடுக்கும் காயங்கள் வேறு
தேடிசெல்லும் காயங்கள் வேறு
காயங்கள் எப்பொழுதும் நிலைப்பது இல்லை
கடமைகள் நெருக்கும் பொழுது
காயங்கள் விலகும்
காலத்தின் கட்டாயம் நாம் தனிமையில் வாடும் நிலை ...
அனாதையாய் வாழும் வாழ்வு என்றும் நிலைக்காது
தாயாய் மடி தாங்க ஜீவன்கள் உண்டு இவ்வோலகத்தில்
சேயாய் ஓடிவா தோள்சேர....
நான் அதிதி தான் ...
உன் அன்பை யாசிக்கும் அதிதி ...
நான் கர்ணன் தான் ....
உனக்கு அன்பை வாரி வழங்க....
உன் வார்த்தைகளில் வலி ...
உன் பிரியமானவர்களின் இதயம் கனக்க செய்யுமடி ....
-
யாராச்சும் பிடிச்சவங்க கூட சண்டை எதுவும் இருந்தால் அல்லது பேசாம இருந்தார்கள் என்றால் சில சமையம் வெறுமையாய் தெரியும். அந்த ஒரு நிலைல இருந்துதான் இந்த கவிதையை எழுதிருக்கணும்னு நெனைக்கிறேன்.
பகைமை மட்டுமே அனாதையாய் ஆகும் நிலை சீக்கரம் வரும் சம்யுக்தா. கவிதை அருமை .
-
சில நேரம் குழம்பி தான் போகிறேன்
எழுதிய கவிதையை பாராட்டுவதா
இல்லை
எழுதிய நிலை எண்ணி ஆறுதல் சொல்வதா ?
சில நேரம் நம்நிலை உடன் இருப்பவருடன் கூட
பகிர்ந்து கொள்ள முடியாமல்
கவிதையாய் வெளிப்படுத்திக்கொள்கிறோம்
அன்பு என்றும் அனாதை ஆகாது
அது பகிர்ந்துகொள்ள தேடிக்கொண்டே இருக்கும்
இறைவன் இருக்கிறான் என்றும் நம்துணையாய் சகோ
காலத்தை வெல்லுவோம் அவர் துணை கொண்டு
கவலை மற
-
மிக அருமை தோழி