FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on November 08, 2018, 05:30:35 PM
-
அண்ட பெருவெளியில்...
நட்சித்திரா துகள்களை...
சிதறுவதை .போல் .
என் மனம் சிதறுவதை...
கண்டும்..காணாமல்..போகிறது
உன் மௌனம்!
ஊழி காற்றிலும்...
ஓலமிடும் புயலில் ...
உன் காலடி ஓசையை ........
கேக்க துடித்து இருக்கும் ...
வேளையில்...........
உன் மௌனம்தான் கேக்கிறது...
இதயத்தின் துடிப்புகள் ....
தன் வேகத்தை ..அதிகரித்து..
உன்னிடம் பேச ....
ப்ரயத்தனப்படுகின்றன...
ஆனால்... ரத்தத்தின் ..
அனலில் தெறிக்கிறது...
உன் மௌனம்!
ஆகாய சிறகில்..ஏறி...
உன்னிடம் போய் சேர ....
தத்தளிக்கும்..படகாய் மனம்..
பரிதவிக்கும் என்னை பார்த்து...
சிரிக்கிறது ...உன் மௌனம்!.
காய்ந்த சருகுகளுக்கு ...
காயம் படாது...என்று எவர் சொன்னது!
கானல் நீர்க்கு.......வேர் விடும் ...
என் கண்ணீரை ....
வேடிக்கை பார்க்கிறது..
உன் மௌனம்!
-
மலைத்து போனேன் கவிதை படித்து சிலையாகி போனேன்
சில நேரம் மௌனத்தின் எதிர்வினை நம்மை காயபடுத்தும்போது திகைத்து போய் நிற்கிறோம்
மீண்டு வர வழிதெரியாமல்
வரிகள் வலிகள் உணர்த்தியது
-
மனம் விரும்புவர்களின் மௌனம் ரணம் தான் பேபி. மௌனத்தின் வலி உணர்த்தும் கவிதை :(
-
அதிகமானவர்கள் மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்பதை மட்டும் அறிவார்கள். ஒரு சிலர்க்கு மட்டுமே அதில் வேதனையும் உண்டு என்று புரிந்து கொள்கிறார்கள். ரிஷிகா அருமை. வாழ்த்துக்கள்
-
அண்ட பெருவெளியில்...
நட்சித்திரா துகள்களை...
சிதறுவதை .போல் .
என் மனம் சிதறுவதை...
கண்டும்..காணாமல்..போகிறது
உன் மௌனம்!
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.உங்களுக்கு எனது பாராட்டுக்கள் .வளரட்டும் இன்னும் அதிக கவிதைகள்
-
கவிதை அருமை . தொடர்ந்து எழுதுங்கள் ரிஷிகா.