FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: RemO on March 24, 2012, 02:37:36 AM
-
‘’மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க்!’’
‘’எப்படி?’’
‘’இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்!’’
‘’படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!’’
‘ஏன்?’’
‘’சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?’’
‘’நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?’’
எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க’’
‘‘அதோ போறது தலைவரோட தசாவதாரம்!’’
‘’என்ன சொல்றே?’’
‘’தலைவரோட பத்தாவது தாரம்!’’
‘’ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே காசு இல்லை..!’’
‘’அடடா! அப்புறம் என்ன பண்ணினே?’’
‘’பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்’’