FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 01, 2018, 11:20:46 PM

Title: வெற்றியின் முகமே.....
Post by: Guest on November 01, 2018, 11:20:46 PM
நான் தொடும் தூரத்திலேயே
இருக்கிறாய் நீ - எனை
தொட்டுத்தொட்டு
விலகிச்செல்கிறாய்...
.
நான் கால் இடறி
வீழும்போதெல்லாம் எனை
தூக்கி நிறுத்துகிறாய்
கண் திறந்து பார்ப்பதற்குள்
எங்கோ தொலைந்து போகிறாய்...
.
என் பார்வைகளினூடே
என் வார்த்தைகளினூடோ
என் எழுத்துக்களினூடோ
அவ்வப்போது வெளிப்படும் நீ
தற்காலிகமாய் வாழ்ந்து செல்கிறாய்..
.
என்னில் நிலைகொள்ளாத நீ
இன்னும் என் அருகிலேயே
இருப்பதாய் உணர்கிறேன்
இலக்குகளை தீர்மானிக்கவியலாத
நிதர்சன வாழ்க்கையில்
நான் உனை கடந்து செல்கிறேன்...
.
இலக்குகளைச்சுமந்து செல்லும்
பலர் எனை சிலாகித்துச்செல்கையில்
அவர்கள் முகங்களில் உன்
சாயல் காண்கிறேன்,
இறுக்கமான பாதைகளை
எழிதில் கடப்பதற்காய் இலக்குகளை
நோக்கி காத்திருக்கிறேன்....
.

வெற்றியின் முகங்களே
கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்...