-
எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. ஆக்கமும்,கருத்துக்களும் நிறைந்த உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கவிதைகள் தீபாவளி திருநாள் பற்றிய சொந்த கவிதைகளாக அமைந்திட வேண்டும்.
இந்த பகுதியில் முன்பதிவு செய்தல் கூடாது.
அதிகமான கவிதை பதிவுகள் வரும்பட்சத்தில் குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும் இங்கு குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பதிவுகள் அனுமதி மூடப்படும் . எனவே தங்கள் கவிதைகளை விரைவில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் 31 ஆம் தேதி (புதன் கிழமை) இந்திய நேரம் இரவு 12:00 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தீபாவளி திருநாளில் உங்கள் கவிதைகள் நண்பர்கள் இணையதள வானொலி வழியே ஒலிக்கட்டும். தீபாவளி திருநாளில் உள்ளம் மகிழட்டும்.
-
இறைவன் அருளிய திருநாளாம்...
இயற்கை நல்கிய பெருநாளாம்...
தெய்வத்தால் அதர்மம் அழிந்த நாளாம்...
பூமிதனில் தர்மம் பொழிந்த நாளாம்...
ஆலயங்களில் எங்கும் பக்திமயம்...
இதயங்களில் பொங்கும் இன்பமயம்...
உள்ளங்கள் சூடும் ஆனந்தம்...
இல்லங்கள் பாடும் பேரின்பம்...
காரிருள் யாவும் தீபங்களால் மறையும்...
பேரொளி வந்து ஆன்மாவில் உறையும்...
வாசலின் கோலங்கள் மனதை கிரங்கடிக்கும்...
வானவெடிகள் சேர்ந்து வானை அலங்கரிக்கும்...
உறவுகளுக்கிடையே குதூகல பந்தம்...
நாடிவந்து விருந்து தரும் இனிய சொந்தம்...
மகிழ்ச்சி தவழும் இந்நாளில்
மனிதம் வளர்த்தல் நன்றன்றோ...
வறுமை வாட்டும் உயிர்களுக்கு
உதவி புரிதல் சிறப்பன்றோ...
நாம் கொண்டாடும் நாழிகையில்
தினம் திண்டாடும் மக்களை சேர்ப்போமே...
கசந்து போன ஜீவன்கள் வாழ்வில்
இனிப்பாய் பல நன்மைகளை வார்ப்போமே...
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...
நன்னாளில் நாமும் ஈகையை பேணலாம்...
தீபத்திருநாளன்று மனிதம் நாட்டலாம்...
நம் சந்ததிக்கும் நற்பண்புகள் ஊட்டலாம்...!!!
𝕀𝕟𝕚𝕪𝕒 𝕥𝕙𝕖𝕖𝕓𝕒𝕒𝕧𝕒𝕝𝕚 𝕟𝕒𝕝𝕧𝕒𝕒𝕫𝕙𝕥𝕙𝕦𝕜𝕜𝕒𝕝 𝔽𝕋ℂ 𝕒𝕟𝕓𝕦 𝕤𝕠𝕟𝕕𝕙𝕒𝕟𝕘𝕒𝕝𝕖...!
(https://i.postimg.cc/qvkHNTDx/diwali.gif)
(https://i.postimg.cc/VvrLH8PC/diwali1.gif)
𝔼𝕥𝕥𝕦𝕥𝕙𝕚𝕜𝕜𝕦𝕞 𝕚𝕟𝕓𝕒𝕞 𝕡𝕒𝕣𝕒𝕧𝕒𝕥𝕥𝕦𝕞...!
-
திக்கெட்டும் திகில் சத்தம்
தீபாவளி என் வீட்டை தட்டுகிறதோ
தீபாவளி வந்தாச்சு தீபம் ஏற்றி
தீமைகளை தீயாக்கிவிடு
தின்பண்டங்களை திணித்து
துயர் துன்பங்களை துரத்திவிட்டு
ஏழைக்கும் எளிவர்க்கும் தீபாவளியும் உண்டோ
அதை அவர்களுக்கு அளித்திடாத மனிதநேயமும் உண்டோ
நீ அதனை ஒளித்திடு
அவர்கள் வாழ்க்கையும் பிரகாஷிக்கட்டும்
உன்னால் முடித்ததை செய்
அவர்கள் மனத்திலும் வண்ணங்கள் மிளிரும் .
ஆண்டவனுக்கு செய்வதை விட இல்லாதவர்களுக்கு செய்
உன்னில் அவர்கள் ஆண்டவனை பார்ப்பார்கள்.
ஒவ்வொருவரும் தீபம் ஏற்றுகிறோம்
தீபாவளி உன்னை மன்றத்திட்டு வரவேற்க .
எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-
தினம் தினம் தீபாவளி!
அன்பு தோழிகளே ! தோழர்களே!
தீபாவளி வாழ்த்துக்கள்!
நமக்கு என்றும் தீபாவளி தான்!
ஆரம்பிக்கும் அன்றைய காலை..
ஆரவார ஆயிரம் வெடியாய்!
சமையலை முடிக்கையில்....
சங்கீதம் பாடும் இன்னிசை வெடியாய்.....
குக்கர் சத்தம்,,,,,நித்தம் நித்தம்....
படபடவென வெடிக்கும் கடுகு ....
சரசரவென வெடிக்கும் பட்டாசு!
குழம்பின் மனமும்......
அவியலின் வாசனையும்...
பாஸ்பெரோஸ் வாசனையை மிஞ்சும்...
வேலைக்கு ஓட...பஸ்சில் ஏறி..
இடி படும் போது ....
பாம்பு பட்டாசாய் சீறும் மனசு!
தலைமையிடம் திட்டு வாங்கும் போது ...\
குமுறி குமுறி ....
பொங்கல் பட்டாசாய் ..
பொங்கும் மனசு...
பிரியமானவர்களை கண்டால்...
மத்தாப்பாய் விரிந்து சிரிக்கும் மனசு !
சுழன்று சுழன்று வேலை செய்யும் போது..
சங்கு சக்கரமாய் சுற்றுகின்றோம்!
சாட்டை பொறிகளாய் ...
வார்த்தைகள் வீசும் போது...
புஷ்வானமாய் பொசுங்கி போகின்றோம் !
ஆனாலும் என்ன ? !
நம் சோகங்களை சுட்டு விடுவோம் !
ஏமாற்றங்களை எரித்து விடுவோம் !
அறியாமையை அகற்றி விடுவோம் !
துயரங்களை துரத்தி விடுவோம்!
உயரங்களை ராக்கெட்டாய்....
ஏறி தொட்டுவிடுவோம்!
தோல்விகள் சுருள் பட்டாசை ...
சுருங்கி வெடிக்கட்டும்..!
தொடர் முயற்சிகள்..
நமுத்து போகாமல்..
நெருப்பாய்... நெஞ்சில் பற்ற வைக்கட்டும்!
எங்கும் தீப ஒளி சிந்தட்டும்!
அன்பின் கதிர் பாயட்டும்!
வறுமை ஒழியட்டும்!
செல்வம் செழிக்கட்டும் !
புத்தம் புது வரவுகளும்.. உறவுகளும்...
ஆடைகளும்.. அணிகலன்களுமாய்..
மின்னட்டும்,...
இனிப்புகளும் விருந்தோம்பலுமாய் ....
இனிமை எங்கும் வீசட்டும்!
வாழ்வில்...
வர்ண ஜாலங்களை...
அள்ளிவீசட்டும் மகிழ்ச்சியை !
வாண வேடிக்கையாய்!!
இனி..
தினம் தினம் தீபாவளி தான்!
(https://i.postimg.cc/Kk3XR4YP/unnamed-700x394.jpg) (https://postimg.cc/Kk3XR4YP)
-
தீபஒளி திருநாள்
குண்டு குண்டாய் லட்டு
தேவதையின் கன்னம் போல
தேனொழுகும் தேனடை
தேவதையின் குரலை போல
அச்சு அச்சாய் செஞ்சு வச்ச அச்சுமுறுக்கு
தேவதையின் வலைப்பின்னல்
புதுபச்சரிசி மாவுடன் வெல்லப்பாகு
கலந்த மாவிளக்கு
இன்ப துன்ப போல் கரகர மொறுமொறு காராபூந்தி
நொறுக்கு நொறுக்கு என திங்க தேங்காப்பால் முறுக்கு
என்னாட்டு காய்கறியில் மணக்கும் கூட்டு
உண்ணும் உணவு யாதாயினும் இன்புற்று பகிர்ந்து உண்டு வாழ்வீராக
தீப ஒளி திருநாளை புத்தாடை மற்றும் இனிப்புகளுடன் கொண்டாடி மகிழவும்
-
இருக்கின்ற இடம் யாவும்
ஏற்றிடும் தீபம் எல்லாம்
நீக்கிடும் இருள் தானே
தீபாவளி நன்நாளே
தீயவற்றை ஒதுக்கிவிட்டு
நல்லவற்றை செதுக்கிவிட்டு
அகத்திலே ஒளியேற்றும்
அன்புதனை பெருக்கிடும்
இனிமையான உறவுகள்
இனிக்கின்ற உணவுகள்
இனிதாக இணைத்திடும்
இன்பமதை அளித்திடும்
வானவேடிக்கை நகர்வலங்கள்
மகிழ்ச்சியின் குதுகலங்கள்
மனதோரம் நிலைத்திடும்
தித்திப்பை கொடுத்திடும்
**விபு**
FTC நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
-
தீபாவளியே தீபாவளியே வா வா
தீபாவளிக்கு முறுக்குப் பிழிந்ததும்
வரும் கைவலியே வா வா
எண்ணைக்குள் நீ என்ன ஆட்டம் போட்டாலும்
என் வாய்க்குள் போனதும் அடங்கிடுவாய் வா வா
என் வீட்டில் கடைக்குட்டி
லட்டு என்று அழைக்கப்படும் செல்லக்குட்டி
எனக்கு போட்டியாக வீட்டில் செய்த லட்டே வா வா
உன்னை லபக்கென்று விழுங்கிடுவேன் வா வா
ஜீராவுக்குள் மூழ்கி இருந்த
சின்ன பந்தே வா வா
குலாப்ஜாமூன் என்று உன்னை அழைப்பேன் வா வா
உருவமில்லாத உனக்கு
அச்சில் போட்டு உருவம் கொடுத்து சுட்ட
அச்சு முறுக்கே வா வா
என் தாத்தாவின் பல்லை
பதம் பார்க்க பிறந்த முருக்கே வா வா
டமால் டுமீல் என்று
என் வீட்டு முன்னே
பட்டையை கிளப்பப்போகும் பட்டாசே வா வா
என் பாட்டின் திட்டை கேட்கவே
பிறந்த பட்டாசே வா வா
மின்சாரம் இல்லாமல்
வீடு முழுக்க பிரகாசிக்கப் போகும்
எண்ணெய் ஊற்றிய அகல்விளக்குகளே வா வா
புத்தாடையோ ஜிலுஜிலுக்குது ...
மேக்கப்போ பளபளக்குது ....
வீட்டுக்குள்ளே கோழிக்கறி மனமனக்குது ....
விருந்தாளி கூட்டமா இருக்க ....
அடுப்படில அம்மா சிடு சிடுனு இருக்க ....
ஒளி தரும் தீப ஒளியே வா வா .....
என் வீட்டுக்கு ஓடி வா வா ....
அனைவர்க்கும் breez ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
-
(https://i.postimg.cc/VLCWGMX1/kisspng-pencil-diwali-rocket-5b4c4c58e30728-20655894153172693692.png) (https://postimages.org/)
தீபாவளி
புராணங்கள் சொல்லும் கதை
கடவுள் அவதாரம்
அரக்கர்கள் ஆக்ரோஷம்
தீமை ஒழிந்து
நன்மை பிறந்து
இருள் மறைந்து
வெளிச்சம் மலர்ந்து
நரகாசூரனை அழித்த நாள்
தீபாவளியாம் ....
எது தீபாவளி ?
ஒருவரின் இறப்பை
கொண்டாடுவது தீபாவளியா ?
நாம்
ஆட்டுமந்தையா
இல்லை
ஆறுஅறிவு கொண்ட
மனிதக்கூட்டமா ?
எது தீபாவளி ?
கற்பனையில் உருவெடுத்த
நரகாசூரனை கொன்று
கொண்டாடுவது அல்ல தீபாவளி
நம்முள் இருக்கும்
நரகாசூரர்களை கொல்வதுதான்
தீபாவளி !
பேராசை கொள்வது
கோபப்படுவது
இரட்டை வேடம் இடுவது
பிறரை கொடுமை செய்வது
பொறாமை கொள்வது
வதந்தி பரப்புவது
போன்ற நம்முள் இருக்கும்
தீய நரகாசூரர்களை அழிப்பதே
தீபாவளி !
நல்ல எண்ணங்களை
எழுத்துக்களில் வைத்து
பகுத்தறிவை
இதயத்தில் வைத்து
தீபத்தில் இருக்கும் நெருப்பை போல
நிமிர்ந்து நின்று
பிறரை கொன்று கொண்டாடுவதை விடுத்து
பிறருக்கு கொடுத்து கொண்டாடுவதை வளர்த்து
அன்பை பகிர்ந்து
அனைவரையும் அரவணைத்து
இனிப்புகளை சுவைத்து
புத்தாடையை அணிந்து
உற்சங்கம் பொங்க
இன்று போல் என்றும் வசந்தம் வீச
அனைத்து நண்பர்களுக்கும்
என் இனிய தீப நல்ல ஒளி நல்வாழ்த்துக்கள் ...
(https://i.postimg.cc/K1zgrdhP/imageedit-1-9302165009.png) (https://postimg.cc/K1zgrdhP)(https://i.postimg.cc/K1zgrdhP/imageedit-1-9302165009.png) (https://postimg.cc/K1zgrdhP)(https://i.postimg.cc/K1zgrdhP/imageedit-1-9302165009.png) (https://postimg.cc/K1zgrdhP)
-
தீபக் திருநாளாம் தீபாவளி
அசுரனை வென்று உலகுக்கே
ஒளி தந்த நாளிது
கண்ணுக்குத் தெரியும் அரக்கனை
கிருஷ்ணன் துணை கொண்டு வென்று விட்டோம்
கண்ணுக்குத் தெரியாத
நமக்குள்ளே தூங்கி கிடக்கும்
கொடிய பகைவர்களாம்
பகை வன்மம் காமம் குரோதம்
இவர்களை யார் துணை கொண்டு
வெல்லப் போகிறோம்
வீட்டுக்கு தீபங்களை ஏற்றி
இருளதனை விரட்டுகிறோம்
இருள் சூழ்ந்திருக்கும் நம் மனங்களை
ஈகை அன்பு இரக்கம் எனும்
தீபங்களை ஏற்றி பிரகாசிக்கச் செய்திடுவோம்
நம் மனங்களில்
தன்னம்பிக்கை எனும் நெய் ஊற்றி
மகிழ்ச்சி எனும் தீபங்களை ஏற்றுவோம்
தீபத்திருநாள் அன்று
பட்டாசு மத்தாப்பு கொளுத்துவதை விட
நம் மனதின் ஈகோ சுயநலத்தைக் கொளுத்திடுவோம்
கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி
காதை கிழிக்கும் ஒலியும்மின்றி
காற்றின் தூய்மை கெடாமல்
ஓசான் படலத்தை ஓட்டை போடாமல்
கொண்டாடுவோம் தீபாவளி
செய்யும் பலகாரங்களை
இருக்கும் அண்டை அயலவருக்கு
கொடுப்பதை விட
இல்லாத ஏழைகளுக்கு கொடுத்தது
அவர்கள் முகங்களிலும்
மகிழ்ச்சி எனும் தீபத்தை ஏற்றுவோம்
FTC நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-
திக்குக்கு ஒருவராய் இருக்கும் நம்மை
ஒருங்கிணைத்து கொண்டாட வைக்கும்
தித்திக்கும் தீபாவளி வருது
தித்திக்கும் இனிப்பு பலகாரம் செய்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
தீமையெல்லாம் செய்த அரக்கனை வதம் செய்த
இறைவனை போற்றி கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
நெசவு செய்த நெசவாளியையும்
விவசாயம் செய்த விவசாயியையும்
நினைத்து நினைத்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
உடலெல்லாம் வெடி மருந்து ஆனாலும்
பட்டாசு செய்து விற்று நாம் அதை வெடிக்கையில்
அவன் குடும்பம் ஒரு வேலை உணவு உண்டு கொண்டாட
நம் மனமும் மகிழ்ந்து கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
அதிகாலையில் தம் மனம் கவர்ந்த நடிகரின்
படத்தை திரையரங்கில் முதல் காட்சி கண்டு
காளையர்கள் கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
உலக தொலைக்காட்சியில் முதல்முறையாக
வீட்டின் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை
கன்னியர்கள் அமர்ந்து கண்டுகளிக்க
தித்திக்கும் தீபாவளி வருது
சிறுவர் முதல் முதியவர் வரை
தித்திப்பாய் கொண்டாட
தித்திக்கும் தீபாவளி வருது
WISH YOU HAPPY DIWALI
ITS ME..
JOKER
-
(https://media.giphy.com/media/HAWDYCNxr2HeM/giphy.gif)
(https://i.imgur.com/gLcg95D.gif)
தீபாவளி தீபாவளி
தீபஒளி திருநாள் இது
தீபாவளி தீபாவளி
தங்க திருநாள் அது :)
தெருவெல்லாம் மத்தாப்பு
மனசெல்லலாம் சிரிப்பு :D
வாயெல்லாம் இனிப்பு
வயிறெல்லாம் களிப்பு :P
அன்புக்காக ஆயிரம்பேர்
அநாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
ஏங்கிக்கொண்டிருக்க
அலைபேசியில் உரக்க
கத்தி கொள்கிறோம்
ஹாப்பி தீபாவளி!
ஹாப்பி தீபாவளி!
நம் சொந்தங்களிடம் மட்டும் ;)
ஒளியேற்ற யாருமில்லாமல்
எத்தனையோ இதயங்கள்
இங்கு இருண்டுகிடக்க
கட்டாயம் விளக்கு
ஏற்றி வைத்து
அழகு பார்க்கிறோம்
நம் சாமிக்கு மட்டும் ;) :)
அரை வயிறோடு
ஆயிரம் பேர்
எங்கங்கோ
எப்படி எப்படியோ
வாடிக் கிடக்க
வகை வகையாய்
அடுக்கி வைத்து
நமக்கும் சாமிக்குமென
வயிறு முழுவதுமாய்
நிறைத்துக்கொள்கிறோம்
தப்பாமல் நாம் மட்டும் ;)
மெல்லிதாய் கொஞ்சம்
மத்தாப்புக்களோடு
புன்னைகைத்து
நிறுத்திக்கொள்வோம்
என்று சொன்னாலும்
பண்டிகை என்றால்
அணுகுண்டு வெடியும்
சரசர சரவெடியும்
ராக்கெட் வெடியும்
விட்டு வெடிசத்ததோடு
உரக்கத் தான்
சிரிப்போம் குட்டி
நரகாசுரன்களாய் என்று
காற்றை குப்பையாக்கி
தெருவையும் குப்பையாக்கித்தான்
கட்டாயம் தீபாவளியை
முடிப்போம் நாங்கள் 8)
ஆச்சாரங்கள் செய்து
அமர்க்களங்கள் கொண்டு
ஆட்டம் போட்டு
அசத்தலாக கொண்டாடி
வழக்கம் போலவே
வருடம் தோறும்
முடித்து விடுகிறோம்
இந்த தீபாவளியை
விடாமல் முண்டியடித்து
வரிசையில் நின்று
தீபாவளி திரைப்படங்களின்
முதல்நாள் காட்சியை
பார்த்த பின்னரே
பெருமூச்சு விடும்
பெரும் விசுவாச
கூட்டங்கள் நாங்கள்
விட்ட குறைக்கு
விடாமல் எங்கள்
வயிறு முழுக்க
மதுவை நிரப்பி
நனைந்து கொள்கிறோம்
தீபாவளி மழையில்
தள்ளாட்டமும் அதனோடே
கொண்டாட்டமுமாய் நாங்கள்
சுயநல நரகாசுரனை
சுயத்தில் வீழ்த்தி
அப்பழுக்கற்ற அன்பை
அறியாதவனிடமும் பரிமாறி
அழகாய் இணைந்து
அவனியில் கொண்டாடும்
அன்பின் தீபாவளி
(https://i.imgur.com/pOiev6Y.gif)
அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
-
சீனத்து மலிவு வெடினு
சொல்லிக்கொண்டு
இங்கு வாறானே!
என் நாட்டு காச
அவனும் அள்ளிக்கிட்டு
போறானே !
பட்டாசு கொழுத்திட
ரெண்டு மணி நேரம்
போதுங்க ..
தொழிலகங்கள்
புகைவிட்டால்
இரண்டு மணியில்
மூடுங்க ...
கருப்பு கோட்டுபோட்ட
நடுவர்அய்யா தீர்ப்பு
கேட்ட தம்பி வாரனே!
சிவகாசி வாழும்
மக்கள் தலையில்
துணிய போடபோறானே!
நாம ஓட்டுப்போட்டு
வச்சவனும் நித்தம் நமக்கு
வேட்டு வச்சு போறேனே!
நரகாசுரன் செத்தான்னு
கோட்டு போட்ட தம்பி
வேட்டு போட்டு போறானே!
கொடுத்த நேரம் முடியும்
முன்னே கொளுத்திவிட்டு
போறானே !
அரக்கர் நம்மை
ஆளுறாங்க .. அவரை
விட்டு விட்டு போறானே !
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !
-
(https://i.imgur.com/I3iRBS5.gif)
தீப ஒளி திருநாள்
தித்திக்கும் இனிப்புகளை
உண்டு மகிழ்ந்து...!!
இன்பத்தில் புன்னகைக்க
துன்பத்தை மறப்பீர்...!!
மனதில் பதிந்து இருக்கும்
தீய எண்ணங்களை தீயினால்
பற்றவைத்து பட பட பட்டாசுகளை
வெடித்து மனதை
தூய்மைப்படுத்திடுவீர் ...!!
புது புது ஆடைகளை அணிந்து
கண்ணை பறிக்கும் அழகோடு ...!!
தீப ஒளி பிரகாசத்தில் இன்பத்தில்
புன்னகைக்க தேவதை
போன்று காட்சி அளிப்பீர் ...!!
யாம் பெற்ற இன்பங்களை
பிறரும் பெற வேண்டி ...!!
ஜாதி மத பேதமின்றி
இனிப்புகளையும் பாட்டாசுகளையும்
பகிர்ந்து அளித்து மகிழ்வீர்...!!
உங்கள் இன்பத்தை கண்ணால்
கண்டு களித்து நானும்...!!
மகிழ்கிறேன்...!
FTCநண்பர்களுக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
(https://i.imgur.com/gLcg95D.gif)(https://i.imgur.com/Pni5yB9.gif)
(https://i.imgur.com/pOiev6Y.gif)
(https://i.imgur.com/Y1UC7oG.gif)
-
இருளெனும் அரக்கனை அழித்து...
ஒளியெனும் தீப சுடரால் தீமைகளை ஒழித்து ...
வாழ்கை எனும் விளக்கை ...
ஏற்றிவிடும் திருநாளாம்!
அதிகாலை எழுந்து....
அனைவரும் கொண்டாடிடும் ஒருநாளாம்!
இனிமையான பொழுதினிலே.....
இன்னிசை ஒலிக்கும் ஒலி நாளாம்!
வான்வெளில் நட்சத்திரங்களுடன் ....
நாட்டியமாடும் நன் நாளாம் !
நாளெல்லாம் உழைத்தவர்களின்...
நலன்களை விசாரிக்கும் ஒரு நாளாம் !
அனைத்து மக்களையும் ஒன்றாக ...
இணைத்திடும் திரு நாளாம் !
புத்தாடை உடுத்தி புதுமையை ....
வெளிப்படுத்தும் தெய்விக நாளாம்!
பட்டாடை உடுத்தி ...
பட்டாசை வெடிக்கும் வெடி நாளாம்!
அன்பானவர்களிடம் அன்போடு...
அழைக்கும் அருள் நாளாம்!
தன்னலம் கருதாமல்...
தன் நிலைமையை மறந்து இன்ப நாளாம்!
இருளெனும் அரக்கனை கொன்று ...
ஒளியெனும் சுடர்விட ...
தீமைஅகற்றி வாழ்க்கை
விளக்கை ஏற்றிடும் நாளாம்..
அதிகாலை துயில் எழும் அழகிய நாளாம் ..
அதுவே தீபாவளி எனும் திருநாளாம் ...
தீபஒளி பரபரப்பில் பற்றிக்கொண்ட
விழாக்கால கடைகளையெல்லாம்
வெள்ளக்காடாய் மிதக்கவைத்துவிட்டு
வெளியேறி சொந்த ஊரு சென்றுவிட்ட
என் தமிழ் இளைஞர்களைபற்றி உருமா
உருமாறிப்போன
வீதிகளும் பெருமூச்சு விட்டுக்கொண்டே ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன அசுரனை கொன்றுவிட்ட இந்நாள்தான்
இந்நாள்தான்
இவர்களுக்கு
இனியநாளாமென்று...!
இனிமையுடன் கொண்டாடி மகிழ்வோம் இந்த தருணத்தில் வாழ்கை முழுவதும் ஆனந்தமாக அமையட்டும் என வாழ்த்தும் தீப ஒளி திரு நாள் !!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Flalettre.co%2Fwp-content%2Fuploads%2Fdeepavali-greetings-in-tamil-2017-greetings-deepavali.jpg&hash=36d48e74a4e48739d6fafe885547ea798924817c)
-
(https://i.imgur.com/pOiev6Y.gif)