FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 22, 2012, 04:16:42 PM

Title: என் காத‌லில் ஒரு சில‌ துளிக‌ள்
Post by: thamilan on March 22, 2012, 04:16:42 PM

பூவும் நீயே பூவையும் நீயே


நீ பூச்செடியாக மாறு
உன்னைப் போல அழகான‌
பூக்கள் பூக்கும்
வேறு செடி
உலகில் வேறு ஏதும் இல்லை

பூவை பறித்தவுடன்
பெண்ணாக மாறிவிடு
நான் பூச்சூடிவிடுவதெற்கேற்ற‌
உன்னைப் போல வேறு
அழகிய பெண்
உலகில் வேறு யாரும் இல்லை


 
என் இதயம்

நீ தட்டாங்கல்லை
தூக்கிப்போட்டு பிடிக்கும் போது
தவறி விடுகிறதா

கவலையை விடு

நீ எங்கு தூக்கி வீசினாலும்
உன் கைக்குள்ளேயே
வந்து விழும்

இதோ
என் இதயம்


 
ப‌ட்டாம்பூச்சி


ப‌ற‌ந்து கொன்டிருந்த‌
ப‌ட்டாம்பூச்சியை பிடிக்க‌
தாவிச் சென்றாய்

ப‌ட்டாம்பூச்சியின் வ‌ர்ண‌‌ங்க‌ள்
உன் விர‌லில் ப‌திந்து விடும்
என‌ ப‌ய‌ந்தேன் நான்

உன் வ‌ர்ண‌ம்
அத‌ன் மேல் ஒட்டிக் கொள்ளும்
என‌ ப‌ய‌ந்த‌தாலோ என்ன‌வோ
ப‌ட்டாம்பூச்சியே உன் கையில்
வ‌ந்த‌ம‌ர்ந்த‌து
Title: Re: என் காத‌லில் ஒரு சில‌ துளிக‌ள்
Post by: thamilan on March 27, 2012, 02:47:03 PM
சிக்காகிப் போன‌


திண்ணையில் அமர்ந்து
சிக்கெடுக்கிறாய்
சிக்காகிப் போனது என் இதயம்

கருமேகத்தைக் கண்டு
மழை வரும் என
அவசர அவசரமாக‌
காய்ந்து கொண்டிருந்த உடுப்புகளை எடுத்தேன்
அப்புறம் தான் தெரிந்தது
அது சிக்கெடுக்கும் உன்
கூந்தல் என‌


காதல் என்பது


காதல் பூக்குளமா இல்லை
போர்க்களமா
உன்னிடம் தான் விடை கிடைத்தது
காதல்
பூக்களம் நிறைந்த
போர்க்களம்
Title: Re: என் காத‌லில் ஒரு சில‌ துளிக‌ள்
Post by: suthar on March 27, 2012, 08:09:50 PM
Nice lines
ennai mei maraka vaitha varigal
Title: Re: என் காத‌லில் ஒரு சில‌ துளிக‌ள்
Post by: Bommi on March 29, 2012, 07:19:51 PM
காதல் பூக்குளமா இல்லை
போர்க்களமா
உன்னிடம் தான் விடை கிடைத்தது
காதல்
பூக்களம் நிறைந்த
போர்க்களம்

Tamilan

காதல் என்பது போர்க்களம்  நிறைந்த குதுகலம்
Title: Re: என் காத‌லில் ஒரு சில‌ துளிக‌ள்
Post by: suthar on March 31, 2012, 05:03:07 PM
Kaathal pookulamaavathum porkalam aavathum
allathu kuthoogalam aavathum kathalargalai poruthathu