FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 22, 2012, 02:54:23 PM

Title: பூ(வை)
Post by: thamilan on March 22, 2012, 02:54:23 PM
பாத்தி கட்டி
மரம் வைத்து
தண்ணீர் ஊற்றி
மொட்டு விட்டு
பூ பூக்கும் வரை
காத்திருக்க வேண்டுமா என்ன‌
ஒவ்வொரு முறையும்
நீ சிரிக்கும் போது
பூக்கள் பூக்கின்றனவே

செடியில் பூக்கும் பூவை
உன் கூந்தலில் சூடுகிறாய்
உன் சிரிப்பில்
பூக்கும் பூவை நான்
என் இதயத்தில் சூடுகிறேன்
Title: Re: பூ(வை)
Post by: Bommi on March 22, 2012, 03:16:22 PM
Dear tamil

செடியில் பூக்கும் பூவை
உன் கூந்தலில் சூடுகிறாய்
உன் சிரிப்பில்
பூக்கும் பூவை நான்
என் இதயத்தில் சூடுகிறேன்

intha varigal migayum nadraga ullathu........innum nirya padaipugalai ungalidamiruhtu
ethir parkiren

By
Sana
Title: Re: பூ(வை)
Post by: thamilan on March 22, 2012, 04:17:50 PM
thanks sana.