(https://i.imgur.com/oW4ZC3g.jpg)
வியர்வை சிந்தி உழைக்கும்
தொழிலாளிகள் நாங்கள்...!!
சுட்டெரிக்கும் சூரியனின்
சூழ்ந்திருக்கும்
செம்மண்ணில் நாங்கள் ...!!
பலநாட்கள் உழைத்தால்தான்
வெகுநாட்கள் வாழ்க்கை ஓடுகிறது
அன்றாட காய்ச்சிகள் நாங்கள்...!!
வயிற்றின் பசியும் அடங்கவில்லை...!!
விலைவாசியும் குறையவில்லை...!!
முட்டி மோதி முயன்று வருகிறோம்
எட்டி உதைக்கிறது இந்த
சமுதாயம்...!!
புழுதியில் புரள்கிறோம் பல
வேதனைகளை அடைகிறோம் ..!!
காய்த்துப்போனது கைகள் மட்டும்
அல்ல எங்கள் மனதும்தான்...!!
கால் தவறி விழுதல்
உயிர் கூட போகலாம்...!!
தைரியமே எங்கள்
தன்னம்பிக்கையாம்...!!
கட்டிட தொழிலாளிகள் நாங்கள்...!!!
[/color][/size]