FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 22, 2012, 01:56:20 PM
-
நாம் பேசும் நேரம்
நீண்டது...
அதனாலோ என்னவோ
என் அன்பின் ஆழம்
புரியாமல் போனது
உனக்கு......
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் விஷமாம்
என் அன்பும் விஷமாகி விட்டதோ?
அன்பை தானே கொடுத்தேன்
இதை தவிர நான் செய்த
பிழை என்ன?
இந்த உலகத்தில் உள்ள
அனைத்தையும் விட
அதிகம் அதிகமாய்
நேசித்ததா?
என் மனம் ஏனோ
இன்று
தண்ணீரில்
தத்தளிக்கும் எறும்பாய்
ஆனது
கரையில் துடிக்கும்
மீனாய் ஆனது
உனக்காக அனைத்தையும்
இழக்க தயாராக இருப்பவள்
நான்
நீயோ என்னை இழக்க தயாராகி விட்டதாக
என் உள் மனம்
சொல்லி கொண்டிருக்கிறது
ஏன் என் வாழ்வில் எதுவுமே
நிலைக்காமல் போகிறது
நிலை இல்லா உலகில்
நீ மட்டுமே நிலையான
உறவு என்று இருந்தேனே
இன்று நீயும் எனக்கு நிலை இல்லையா?
இப்படி நடந்து விட்டால்
மரணத்தை அன்போடு முத்தம் இடுவேன்
-
yar yaruku eluthuraney thriyala.....
nan konja naala watch panitey iruken onum vilangala.....
-
suthar nala watchman velai parka try panuriga but athu ungaluku varuthu illa atha athu pokkula viduga hahahaa
-
:S:S:S ena ithu
ithana naal kaathal kavithaiya vanthuchu ithu yaruku