FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 22, 2018, 02:04:20 PM
-
கடவுள் எழுதிய
கவிதைப் புத்தகம் நீ
அதில் எனக்கான கவிதை
உனது காதல்
அதை தினம் தோறும் வாசிக்கும்
வாசகன் நான்
உன் பார்வையில்
விடை தெரியா கேள்விகள் பல
கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு
பதிலுக்காக காத்திருக்கும்
யாசகன் நான்
எப்போதோ என் இதயத்தில்
தேங்கி விட்ட
உன் காதல் தான்
இப்போது நீர்த்துப் போய்
சொட்டிக்கொண்டிருக்கிறது
கவிதைகளாக
எப்பொழுதும்
என் பேனா முனை காயாமல்
மை ஊற்றிக்கொண்டிருக்கிறது
உன் காதல்
எவ்வளவோ மெனக்கிட்டு
பிறகு தான் எழுதுகிறேன்
ஒரு கவிதையை
நீயோ
ஒரு நொடிப் புன்னகையில்
ஓராயிரம் கவிதைகளை
மிதக்க விடுகிறாய்
காற்றில்
-
அழகு கவி