FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 22, 2012, 08:22:18 AM
-
மனிதர்களில் முக்கால்வாசியினர் முரண்பாட்டினர்
பெயர் , பொருள் , குணாதிசயம் , எண்ணம் ,செயல்பாடு இவற்றில் ஒன்றிற்கொன்று நிச்சயம்
முரண்பட்டிருக்கும் முரண்பாட்டினர்
அம்முரண்பாட்டிற்கெல்லாம் முரண்பட்டு, முரண்பாட்டிற்கு முட்டுக்கட்டை இட்டு
முழுதாய் முழுமுழுதாய் முரண்பாட்டினை மூட்டைகட்டிய மதிப்பிற்குரியவள் நீ
ஆம்,அன்பான ஆசியும்,வாழ்த்தும் , பாராட்டும் வழங்குபவள் ஆம் நீ
பெயரின் பொருளுக்கு பெரும் பொருத்தமாய்
வார்த்தைக்கு வார்த்தை வாழ்த்திக்கொண்டுதான் வருகிறாய் .
போற்றுதலாய் பாராட்டை,ஆற்றிகொன்டுதான் வருகிறாய்
வாழ்த்து ,பாராட்டு பெயர்பொருத்தம் ,பொருள்பொருத்தம் எல்லாம் சரி
இருந்தும் மனதின் ஓரத்தில் ஒரு இனம்புரியா சிறு வருத்தம் !
பாராட்டு ,பட்டம் இவற்றிற்கு ஏற்புடையவனா ?
என்று எனக்கே தெளிவாய் தெரியாதபோதும்
கனிவாய் ,கரிசனமாய் "கவிஞரே " என்பவளே !
உன் தரிசனம் தந்ததில்லையே !
-
பாராட்டு ,பட்டம் இவற்றிற்கு ஏற்புடையவனா ?
என்று எனக்கே தெளிவாய் தெரியாதபோதும்
கனிவாய் ,கரிசனமாய் "கவிஞரே " என்பவளே !
உன் தரிசனம் தந்ததில்லையே !
migavum eerpudaiya paaratu ungaluku
pattam eerpudaya varuku thane tharanum
antha vithathil paaratum pattamum migavum poruthamanavaruku than koduthu irukirom
kavignare oru velai avargal tharisanam tharamal irupathu ungalai thavam seiya veika idea seithu irupanga pola