FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Ayisha on October 09, 2018, 11:11:09 AM

Title: சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?
Post by: Ayisha on October 09, 2018, 11:11:09 AM
(https://i0.wp.com/2.bp.blogspot.com/-mSmK8LEtNBg/VHxrRQ9qdbI/AAAAAAAAQtI/0e45TBaqEFk/s1600/seethapazam%2B%2B1.jpg?w=960)


கஸ்டர்டு ஆப்பிள், பட்டர் ஆப்பிள் என, ஆங்கிலத்தில் பல பெயர்களில் அழைக்கப்படும் சீத்தாப்பழம், சுவை மிக்க இனிய பழம். குளூகோஸ் வடிவில், நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.


வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீத்தா, சிறு மர வகையைச் சார்ந்தது. தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே, அரிய மருத்துவ பண்புகளை கொண்டவை.
சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்:
சீத்தாப்பழத்தை உண்ண, செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர, எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். தொடர்ந்து உண்டு வந்தால், இருதயம் பலப்படும். காசநோய் இருந்தால் மட்டுப்படும்.
சீத்தாப்பழ சதையோடு உப்பை கலந்து, உடையாத பிளவை பருக்கள் மேல், பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து, புண்கள் மேல் போட்டு வர புண்கள் ஆறும்.
விதைகளை பொடியாக்கி, சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து, தலையில் தேய்த்து குளித்து வர, முடி மிருதுவாகும்; பேன்கள் ஒழியும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிராது.