FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Ayisha on October 07, 2018, 07:17:06 PM
-
இயற்கை பேஷியல்கள்…
(https://i2.wp.com/tamilmedicaltips.com/wp-content/uploads/2016/01/85e74f1e-605e-478c-a39d-8e40d0276fe8_S_secvpf.gif?resize=298%2C225)
காரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறுதுண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு 15 கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். தோலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் நிறத்தையும் கொடுக்கும் இந்த காய்கறி பேஷியல்.
பழங்கள் பேஷியல்
• வாழைப்பழ பேஷியல்
வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு பேஷியல் செய்ய வேண்டும்.
வாழைப்பழ பேஷியல் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
• ஆப்பிள் பேஷியல்
ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஆப்பிள் பேஷியல் சிறந்ததாக இருக்கும்.
• ஆரஞ்சு பேஷியல்
ஆரஞ்சு பழத்தை வைத்து, பேஷியல் செய்தால், வறட்சியில்லாத சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.
• எலுமிச்சை பேஷியல்
எலுமிச்சை அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அதிலும் எலுமிச்சை ஒரு சரியான கிளின்சிங் பொருள். இதனை வைத்து முகத்திற்கு பேஷியல் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமத்தைப் பெற முடியும்.
• இளநீர் பேஷியல்
சிலருக்கு 25 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். அவர்கள், இளநீர் பேஷியல் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.
இளநீரை பருத்தி பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்கமும் நன்றாக துடையுங்கள். சருமத்தைச் சுத்தமாக்கிவிடும். கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த சந்தனம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
வெளிப்புறத் தூசுகளால் அழுக்கு படிந்து களையிழந்து, மங்கி போன முகம் அழகாக ஜொலிக்கும்.