FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: RemO on March 20, 2012, 08:53:24 AM

Title: How to impress your boy friend
Post by: RemO on March 20, 2012, 08:53:24 AM
காதலிப்பவர்களும், காதலிக்கப்படுவர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலை தக்க வைத்துக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுவார்கள். எப்படி இருந்தால் காதலருக்கு பிடிக்கும் என்று தெரியாமல் தவிக்கும் இளம் பெண்களா நீங்கள்? உங்கள் துணைவரைக் கவர இதைப் படிங்க.

பளிச் தோற்றம்

உங்களை நீங்களே அழகாக உணருங்கள் ! அழகு என்பது மேக் அப் போடுவதில் இல்லை உங்களின் இயற்கை அழகை பேணுவதன் மூலம் உங்களை நீங்களே அதீத அழகு படுத்தலாம். கூந்தலை சீராக வெட்டிவிடலாம். ஒழுங்கற்ற நகங்களை சுத்தமாக வெட்டி மருதாணி வைக்கலாம். சருமத்தை பொலிவாக்கும் உணவுகளை உண்ணலாம். இதன் மூலம் பளிச் தோற்றம் கிடைக்கும். இது உங்களவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும்.

புன்னகை பூத்த முகம்

எந்த சந்தர்ப்பத்திலும் புன்னகையோடு இருங்கள். கோபம் வரலாம் அதையே கடிந்து வெளிப்படுத்தாமல் புன்னகையோடு சொல்லிப்பாருங்கள் நீங்கள் சொல்வதை உங்கள் காதலர் மறு பேச்சு பேசாமல் கேட்பார். எந்த சந்தர்ப்பதிலும் மனம் நோகும் விதமாக பேசி விடவேண்டாம். அது விரிசலுக்கு காரணமாகிவிடும்.

தனித்துவத்தோடு செயல்படுங்கள்

எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் தனித்துவத்தை விட்டுத்தர வேண்டாம். உங்கள் காதலருக்கு ஒரு குறிப்பிட்ட நடிகையை பிடிக்கும் என்பதற்காக நீங்களும் அந்த நடிகையைப் போல உடையோ, மேக் அப் போட்டோ செல்ல வேண்டும் என்பதில்லை. உங்களின் இயற்கையான அழகுதான் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும் எனவே எந்த சூழ்நிலையிலும் தனித்துவத்தை விட்டுத் தர வேண்டாம்.

காதலரின் நண்பர்கள்

உங்கள் காதலரின் நண்பர்களை மதியுங்கள். ஏனெனில் உங்களவர் உங்களை விட அதிகநேரம் அவர்களுடன்தான் செலவழிக்கிறார். ஆண் நண்பர்களோ, பெண் நண்பிகளோ யாராக இருந்தாலும் அவர்களை சந்திக்கும் தருணங்களில் நன்றாக உரையாடுங்கள். அதுவே உங்கள் காதலரின் மனதில் உங்களைப் பற்றிய நல்லெண்ணத்தை அதிகரிக்கும்.

மனம் கவரும் நறுமணம்

வாசனை திரவியங்கள் உபயோகிப்பவர்கள் என்றால் காதலருக்கு பிடித்தமான பெர்ப்யூம் உபயோகிக்கலாம். இதன் மூலம் இருவரின் ரசனையும், நறுமணமும் ஒத்துப் போகும்.

தன்னம்பிக்கை பெண்கள்

தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும் நிறைந்த பெண்களைத்தான் ஆண்களுக்குத்தான் மிகவும் பிடிக்கிறதாம். உங்களின் தன்னம்பிக்கையான செயல்பாடு கண்டு உங்களின் காதலர்கள் பெருமைப்படுவார்கள். உங்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணமும், தன்னம்பிக்கை மிளிரும் பெண்களைத்தான் ஆண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்.

உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை உங்கள் காதலரால் கணிக்க முடியாது. எனவே உங்களின் மனதில் உள்ளதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். அதுவே உங்களின் உறவையும், காதலையும் அதிகரிக்கச் செய்யும். பேசுவதன் மூலம்தான் உங்களின் காதலை, உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் உங்களின் காதலரும் விரும்புவார்.
Title: Re: How to impress your boy friend
Post by: Global Angel on March 22, 2012, 07:35:54 PM
Quote
உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை உங்கள் காதலரால் கணிக்க முடியாது. எனவே உங்களின் மனதில் உள்ளதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். அதுவே உங்களின் உறவையும், காதலையும் அதிகரிக்கச் செய்யும். பேசுவதன் மூலம்தான் உங்களின் காதலை, உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் உங்களின் காதலரும் விரும்புவார்


sontha karuththu polaa... ;D
Title: Re: How to impress your boy friend
Post by: RemO on March 23, 2012, 12:50:28 AM
ha ha sontha karuthunu sola mudiyathu :D ana ithu than en karuthum
Title: Re: How to impress your boy friend
Post by: S.R.B on March 25, 2012, 09:47:01 AM
nanba ne potturuka msg en kathaliku than pola irukku
avala ennala purinjika mudiala nanba
kovamum pidvathamum athigama iruku
ava manathula enna irukunu therinjikave mudiala nanba
un varigal arumaya iruku nanba
Title: Re: How to impress your boy friend
Post by: RemO on March 25, 2012, 10:41:08 AM
thanks machi

apadila irunthaa than athu ponu machi:D