FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 08, 2018, 02:49:06 AM

Title: .....குழந்தை மனம்......
Post by: Guest on September 08, 2018, 02:49:06 AM
ஏமாற்றங்கள் ஏதும் செய்திட முடியாத
எதிர்ப்பார்ப்புகள் உன்னுடையது...

அழுகையையோ, சிரிப்பையோ
நீ அந்தந்த கணங்கள் தாண்டி
தூக்கிச்சுமப்பதில்லை.

மன்னிப்புக்களை ஒருபோதும்
ஆராய்வதில்லை நீ.

கோபம்கொண்டதற்காய் தினங்கள் நீளும்
அழுத்தமேறிய மௌன ஆயுதங்களையோ,
முகம் திருப்பல்களையோ, தெறித்து விழும்
 கடும்சொற்களையோ நீ வீசி எறிவதில்லை.

உனக்கு தேவையெல்லாம் கண்நோக்கும்
கருணையேறிய ஒரு பார்வை,
ஆரத்தழுவும் ஒரு அன்பு அன்புக்கரம்,
கொஞ்சி விளையாடும் ஒரு கவனிப்பு,
கதைகள் சொல்லும் ஒரு மெனக்கெடல்
இல்லையேல் கதகதப்பாக்கும் ஒரு
அணைத்து தூங்குதல்..

நொடிகளில் கரைந்தோடிடும் உன்
ஏக்கமும் கோபமும் காட்டப்படும்
அன்பின் காரணம் ஆராய்வதில்லை..

கிடைக்கும் சிறு சந்தோசங்களில்
பெரும் உவகை கொள்கிறது
உன்பிஞ்சு மனம்...

குழந்தை மனமோடே தொடர்ந்திருக்கலாம்.... யாவரும்