FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SaMYuKTha on September 03, 2018, 12:14:29 AM

Title: என் இனிய சகோதரன் அனோத்
Post by: SaMYuKTha on September 03, 2018, 12:14:29 AM
எனக்கான இணைய உலகை
நட்புவட்டத்தினுளே சுருக்கி
உறவுகளை கட்டியெழுப்ப
மனமில்லாமல் இருந்தவள் நான்
உன்னை காணும் வரை

தந்தைக்கு நிகரான என்னுடன்பிறப்பை
அண்ணா என்றழைத்த என்னால்
சிறுபேச்சிற்காக கூட பிறரை
அவ்வாறழைக்க  நாவெழாமல் இருந்தேன்
உன்னை காணும் வரை

நேரக்கணக்கில் பேசி
பகிர்ந்ததில்லை உன்னோடு
உற்ற நேரங்களில் தெம்பூட்டி
தோள்கொடுத்து நிற்பாயே என்னோடு

கடவுளின் அருளால்
என்றென்றும் மாறா அன்புடன்
என் இனிய சகோதரனாய்
இன்னும் பல்லாண்டு
மனம்நிறைந்த வாழ்வைப்பெற்று
வெற்றியும் புகழும்
உன்னை சீராட்ட
இந்நாளில் பிராத்திக்கிறேன்

என்றும் உன் அன்பின் தங்கை சம்யுக்தா...
Title: Re: என் இனிய சகோதரன் அனோத்
Post by: AnoTH on September 08, 2018, 02:17:41 PM
(https://s8.postimg.cc/xp75iqlt1/badminton-clipart-thank-you-2.gif) (http://www.friendstamilchat.in/)

வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.
வரிகளின் உணர்வோடு கலக்கின்றேன்.
ஆழ்ந்த அன்பின் உருவாய் உந்தன் பந்தம்
என்னை வலிமைபெறச்செய்கிறது.
முகமறியா பாசத்தில் கட்டவிலா சகோதரியாய்
என்றும் என் மனதில் இடம் பிடிப்பாய்.

அண்ணா மீது கொண்ட அன்பிற்கு மிக நன்றி :).
கவிதை சிறப்பு சம்யு தங்கா