FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 22, 2018, 07:26:23 PM
-
எங்கே சென்றாய் ?
எங்கே சென்றாய் எந்தன் மன்னவனே...
அங்கேயும் வருவேனே விரைந்துதானே..!
காற்று தேரில் அமர்ந்து...
காதலி என்னை மறந்து..
கண்டவர் மயங்கும் விண்ணகம் சென்றான்..
எந்தன் ஆவியும் கொண்டு செல்லாமலே.....
கன்னத்தில் விழும் கண்ணீர் துளிகளுக்கு...
ஒரு கவிதை வடிவம் தந்து விட்டு...
காவிய நாயகன் ..கண் காணாமல் ...
நீ எங்கு சென்றாயோ..?
எங்கே சென்றாய் எந்தன் மன்னவனே..
அங்கேயும் வருவேனே...விரைந்து தானே !
அந்தி பொழுதின் அஸ்தமனத்தின்..
அத்தியாவச ஆசைகளை ...
காதலி எனக்கு தராமல்..
காலனை நம்பி சென்றதும் ..
ஏனோ என் மன்னவனே..
அந்தகனுக்கு விழி கொடுத்து ...
அரைநொடியில் பறிப்பது போல ...
வசந்தத்தை எதிர் பார்த்த எனக்கு..
வாய் வழி அழ முடியாமல்..
வார்த்தைகளுக்கு வடிவு தந்தனவனே..
வந்து விடு சீக்கிரமே..
இல்லையேல்..நானும்தான் அங்கு வருவேனே ..
எங்கே சென்றாய் எந்தன் மன்னவனே...
அங்கேயும் வருவேனே விரைந்துதானே..!