FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 20, 2018, 03:44:52 PM

Title: எப்போதோ எழுதிய ஒரு கவிதையிலிருந்து......
Post by: Guest on August 20, 2018, 03:44:52 PM
நினைவூட்டல்
இயல்பாக நிகழ்ந்து விடுகிறது.
மறத்தலும், மறைத்தலுமே பெரும்போராட்டம்..

விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் சாராம்சம்.
அன்பானவர்களுக்காய் விட்டுக் கொடுங்கள்,
அன்பானவர்களையும் அவர்களுக்கான
அன்பையும் விட்டுக் கொடுக்காதிருங்கள்...

கடந்த கால இழப்புணர்வுடன்
எதையும் எதிர்பார்க்காதீர்கள்!
உரிய நேரத்தில் எல்லாம்
உனக்குக் கிடைக்கும் என்றே
விதி எழுதப்பட்டுள்ளது..

"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்,
என்னை பத்தி உனக்குத்தான் நல்லா தெரியும்"
என சொல்லி வாயடைத்துச் செல்லும்
உறவுகள் அமைவது வரம்...


வரமா, சாபமா என
 தீர்ப்பெழுதி போகாத
முடிவுகள், காத்திருப்புகளை
 சுவாரசியம் கூட்டிப்போகிறது...


காலத்தின் சின்னஞ்சிறு முட்களால்
தள்ளுபடி செய்யப்பட்ட காலத்தில்
நம் காத்திருப்பு தொடங்கியது...


செத்துச் செத்து பிழைப்பதில்
சாகாமல் இருக்கிறது வாழ்க்கை...


எதிர்காற்றில் நடந்தபின், என்னைத்தழுவ
காற்று வந்ததாய் நான் சொல்லும்போதெல்லாம்
நிலா சிரித்துக்கொள்ளும் கிண்டலாய்...


போலியாக சிரிப்பவர்கள் எப்போதும்
சந்தர்ப்பவாதிகளாய் இருக்க வேண்டியதில்லை
சந்தர்ப்பங்களை தொலைத்தவர்களும்
சிலநேரங்களில் போலியாய் சிரித்து
கடக்க வேண்டியிருக்கிறது...