FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 17, 2018, 03:32:44 AM

Title: ஹைக்கூ கவிதைகள் - டொக்கு
Post by: Guest on August 17, 2018, 03:32:44 AM
வாழ்க்கை வஞ்சித்து போனதாய்,
 ஏக்கங்களை சொல்லி
நம்மை கசிய வைப்பதில் தான்
மனதிற்கு எவ்வளவு சந்தோஷம்.. குரூர மனம்....



உனக்கு மட்டும் சிறகுகள் முளைத்தது எப்படி என்கிறேன்!!?
நான் நேசம் செய்து புல்லரிக்க வைத்த ஒரு பொழுதில் உனக்கு சிறகுகள் 🧚‍♀
முளைத்ததாய் விளக்கம் தருகிறாய்...
யார் சொன்னது
தேவதைகள் திமிர் பிடித்தவர்களென்று??.


உண்மைகளை நீயே வைத்துக்கொள்.
உன் பொய் மட்டும் போதுமெனக்கு...


அன்பானவர்களுக்கு இடையே வரும் சண்டைகள் அன்பை அதிகரிக்குமாம், வா அதற்காகவேனும் சண்டையிடுவோம்..


நீ தாகம் தீர பருகிக்கொள்ள உன்னை தொடரும் பெரும்நதி நான்..
உன் தாகம் தீர்த்தலே எனக்கான தேடல்.
இன்னொரு முறை, இன்னொரு முறை என தாகமெடுக்கும்போது நீ என்னில் வா எந்த தயக்கமும் இலாது..
என் விலகல் என்பது,
உனக்கான இடைவெளி மட்டுமே ..


விரல் நுனி தீண்டல்களால்
என் கண்ணீர் துளிகளுக்கு சந்தோசத்தின் சாயம் பூசி செல்கிறாய்.
எங்கோ ஏகாந்தத்தில் தூக்கு மாட்டிக் கொள்கிறது என் சோகம்



உன் வலிகளை வெளிப்படுத்தி,
மெல்ல மெல்ல உனக்கான தேவைகளை
நீ சொல்லத்துவங்கிய போது ...
விருப்பமானவர்கள் உன்னிடம் பொய் சொல்லவேண்டிய நிர்பந்தங்களை இல்லாமலாக்கி, உன் இரகசிய பிரார்த்தனைகள் உயிர் பெற துவங்கி இருந்தன.....


உலகை அதிகம் நேசிப்பவர்கள், எளிதில் காயப்படக் கூடியவர்களாகவே இருப்பது தான் உலகின் நியதி..


"நீ அவ்வளவு அழகா ஓண்ணும் இல்ல..
ஆனாலும் அழகா இருக்க..அவ்வளவு அழகா...!!"
ஆறுதல் சொல்ல காரணம் தேடினாலும் தேடும் காரணம் எல்லாம் உன் தேடலை கூட்டுமே...







Title: Re: ஹைக்கூ கவிதைகள் - டொக்கு
Post by: சாக்ரடீஸ் on August 17, 2018, 01:14:19 PM
dokku machi kavithai sema joooperuuu .....seekarama chat ku va dokkuuu ......hey dokku lochak pachak mochak kachakk dokku enga pona nee aala kanom
Title: Re: ஹைக்கூ கவிதைகள் - டொக்கு
Post by: Guest on August 18, 2018, 02:44:42 AM
Hmm