FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 12, 2018, 08:12:45 PM

Title: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 12, 2018, 08:12:45 PM
என்னை நானே நேசிக்கிறேன்!

பூக்கள் விரிந்த இப்பூவுலகில் ...
பூவாய்  பிறந்த நானும்...
ஓர் ஆத்மாவை நேசிக்கிறேன்...
விரும்புகிறேன்....
காதலிக்கிறேன்...
அந்த உயிர்...
ஆத்மா....
என்னுடையதே...!
ஆம் !...என்னை நானே நேசிக்கிறேன்...

இத்தனை  பெரிய உலகில் ...
உயிர்ப்பிக்க வைத்தது..
என் இனிய உயிர் அல்லவா...?

இயற்கையின் அழகை ......
குளிர் தென்றலின் குளுமையை..
இளவெயிலின் இதத்தை....
உணர வைத்து,,,
சாரல் மழையில் நனைய வைத்து....

இசையை...
இசைக்க வைத்து....
ஓவியங்களை  ரசிக்க வைத்து ...
உணவின் சுவைகளை..
சுவைக்க வைத்து...
மலர்களின் வாசனையை ..
உணர வைத்து.....
எனக்கு அழகின் ஆராதனைகளை ...
கற்று கொடுக்கிறதே.....
ஆதலால் ....என்னை நானே நேசிக்கிறேன்..!

என் தாயின் வயிற்றில் ..
தனியாகதான்  என்னை பிறக்க வைத்தத!
ஆனால் இன்று..
இத்தனை உறவுகளையும்...
பெரியோர்களையும் ...
தோழமைகளையும் ....
கொடுத்து இருக்கின்றதே...!
இவர்களை சந்திக்க வைத்து...
சிந்திக்க வைக்கின்றதே...
ஆதலால் தான்....
என் அழகிய (?)....
உயிரை...
நானே விரும்புகிறேன்!..

அதுதானே ...
இந்த அபூர்வ உலகின்..
அதிசயங்களை ....விசேங்களை..
அறிமுகப்படுத்தியது...
அறிமுகப்படுத்துகிறது...

இக் கானல் நீர் வாழ்விலும்...
எனக்கு ஓர் கனவை ...
ஏற்படுத்துகின்றது..என்றால்..
எத்தனை வேடிக்கையானது அது....!

என் மனதின்..
எண்ணங்களை...
வாழ்வின் தன்மைகளை..
கலை உணர்வை..

கவிதை நயத்தை...
மனிதர்களின் கோமாளித்தனங்களை ...
எதிர் பார்த்து ஏமாறும் ...
எகத்தாளங்களை ....
நான் காண வேண்டாமா..?

உலக நாடக மேடையில்..
நடிக்கும் பிம்பங்களை..
நான் கண்டு களிக்க வேண்டாமா..?
ரசனைகளை  ரசிக்க வேண்டாமா..?
சிரித்து மகிழ  வேண்டாமா..?

எவை அனைத்தையும் ....
பார்க்க வைக்கிறதே,...
அதற்கு என் உயிர் வேண்டுமல்லவா ..?
எதற்கு கைமாறு  என்னால் ...
என்ன செய்ய முடியும்..?

ஆதலால்....
என்னையே...
என் ஜீவனையே ...
விரும்புகிறேன்...
நேசிக்கிறேன்...
காதலிக்கிறேன்..


Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: சாக்ரடீஸ் on August 12, 2018, 08:48:21 PM
rishikaaa sema joooperuuu ungala neengale nesikiringa....azhagana varigal valuthukal .....ungal kavi payanam thodaratum .....
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: KoDi on August 12, 2018, 08:54:12 PM
தன்னை நேசிப்பவர்களால் தான் இவ்வுலகத்தையும் நேசிக்க முடியும். நல்ல கவிதை ரிஷிகா.  ஆனால் உங்களை நேசிப்பதிலேயே  நின்றுவிடாமல் எங்கள் பக்கமும் உங்கள் கண்களை திருப்புங்கள்  ப்ளீஸ் (லோல்ஸ்)   ;D
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: DoRa on August 12, 2018, 10:17:24 PM
Rishu super Kavithai..Ungale Neenga Nesithal Than aaduthavargala  koda Nesikka Mudiyum.... :-* Inum Pala Kavithaikal Elutha vazhalthukal Rishuuuuuuuu ;D :-*
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 12, 2018, 10:25:26 PM
 :-*Hai dora babe...thanks for ur wishes......nesipathu endru vanthuvital...naan enna..nee enna..anaivaraiyum samamaga nesipathu nallathutane..:D
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: DoRa on August 12, 2018, 10:32:15 PM
Rishu  Babee kikiki Amaa amaaa :) ...  .Parukka :o ஆனால் உங்களை நேசிப்பதிலேயே  நின்றுவிடாமல் எங்கள் பக்கமும் உங்கள் கண்களை திருப்புங்கள்  ப்ளீஸ் (லோல்ஸ்)   ;D kodi koda line a irukaru pola :P ahahaha....rishuuu ivanga kitta ellam parthu irukka lolzzzzzz :P ;D ;D ;D
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: gab on August 12, 2018, 10:50:40 PM
கவிதை அருமை .தொடரட்டும் கவிதை பயணம்.
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 12, 2018, 10:55:06 PM
Nandri socky avarkale..Thangal vaalthukum atharavikum mikka mazhilchi..  :D.
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 12, 2018, 11:01:39 PM
:P கொடி!..உங்கள் நிக் பார்த்தால்...ஒரு பழைய பாடல்தான் நினைவுக்கு வந்தது..
கொடி அசைந்ததும் ...காற்று வந்ததா..? காற்று வந்ததும்...கொடி அசைந்ததா...?  :P என்றாலும்...உங்கள் வாழ்த்துக்கும்  ஆலோசனைக்கும் நன்றி.. :D
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 12, 2018, 11:04:27 PM
Thank you Gab sir !....ever need your wish and support..:D
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: AshiNi on August 13, 2018, 07:59:26 AM
Kavidhai semma Rishika sissy
Keep writing
Title: Re: என்னை நானே நேசிக்கிறேன்!
Post by: RishiKa on August 13, 2018, 10:52:45 AM
  அன்பு ஆஷினி.....
உங்கள் கவிதைகள் போல ....
உங்கள் அன்பும் வாழ்த்தும் ...
நெஞ்சை நெகிழ வைக்கின்றது..!
என்றும் அன்புடன்  ரிஷிகா! :-*