FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: DoRa on July 21, 2018, 08:11:18 PM

Title: ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips for men
Post by: DoRa on July 21, 2018, 08:11:18 PM

ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips  for men

(https://s15.postimg.cc/w66guhp3f/handsome_man-1531100.jpg) (https://postimages.org/)
பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.

ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள்.

ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம்.

இதோ உங்களுக்கான சில , பேஷியல்கள்...

Title: Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in tamil for men
Post by: DoRa on July 21, 2018, 08:16:02 PM
 
வெள்ளரிக்காய் மாஸ்க்

(https://s15.postimg.cc/xp6gdhvez/Half-cut-_Cucumber.jpg) (https://postimages.org/)

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும்.

வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

Title: Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in tamil for men
Post by: DoRa on July 21, 2018, 08:19:05 PM
தேன், முட்டை

(https://s15.postimg.cc/e8lqqlxmj/mat-ong-va-trung-ga-1629.jpg) (https://postimages.org/)

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது.

ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.

நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.

இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

Title: Re: ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in tamil for men
Post by: DoRa on July 21, 2018, 08:21:46 PM
வேப்பிலை மாஸ்க் (neem leaf mask):

(https://s15.postimg.cc/8x6u5zjaj/Neem-_Powder.jpg) (https://postimages.org/)

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும்.

இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.