FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on July 24, 2011, 11:28:14 AM

Title: பற்களையும் கவனிக்கலாமே…!!!
Post by: Yousuf on July 24, 2011, 11:28:14 AM
பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்… வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும்.

அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.

ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.
Title: Re: பற்களையும் கவனிக்கலாமே…!!!
Post by: Global Angel on July 24, 2011, 11:09:38 PM
nice post aana jujup epdi kattu pallu erukura unkaluku ithu use aaguthu ::) ::) ::)