குரு இருக்கும் ராசியின் பொதுப்பலன்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyourtamilastrology.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F03%2FGURU_swami.jpg&hash=9eccc36439ad29b2b0b5d52d830cb2173717c010)
குரு மேஷ ராசியில் இருத்தல்:
தரும குணம் மிகுதியாய் இருக்கும். சுபக் கிரகங்கள் குருவை பார்த்தாலும் கூடினாலும் ஜாதகன் வியாபாரம் செய்து பொன் பொருள் தேடி புகழுடன் வாழ்வார்.
குரு ரிஷிப ராசியில் இருந்தால்:
வீடு, பூமி, வாகனங்கள் கிடைக்கும். வாய்ப்பு உண்டாகும். சில கிரகங்கள் பார்வையால் துன்பங்கள் வந்து சேரும்.
குரு மிதுன ராசியில் இருந்தால்:
எல்லோரும் புகழும் கீர்த்தி பெருகும். அதிகமான கல்வியோடு பல மொழிகள் பேசும் திறன் இருக்கும்.
குரு கடக ராசியில் இருந்தால்:
சிறந்த அறிவுத் திறன் அமையும். புத்திர பாக்கியம் அதிகம். சுபகிரகங்கள் பார்வையால் நன்மையும் உண்டாகும். பகை கிரகங்களின் பார்வையால் தீமையும் உண்டாகும்.
குரு சிம்ம ராசியில் இருந்தால்:
தெய்வ பக்தி அதிகம். தொழில் துறையில் வெற்றி கிட்டும். தங்கம், வெள்ளி, பூமி வரும் பாக்கியம் உண்டு.
குரு கன்னி ராசியில் இருந்தால்:
புதன் ஜாதகத்தில் ஆட்சி பெற்று குரு, கன்னியில் இருந்தால் பெரியபுலணாய்வு ஆகி இலக்கண, இலக்கியம் மற்றும் சோதிடத்தில் வல்லமை பெறுவர்.