FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 26, 2018, 01:02:45 PM

Title: பிறந்தநாள் வாழ்த்து
Post by: NiYa on June 26, 2018, 01:02:45 PM
இயந்திரமான என் வாழ்வில்
இதமான தென்றலாய்
உன் நட்பு

இணையத்தில் முகமறியாமல்
உதடுகள்  பேசிக்கொள்ளாமல்
எழுத்துக்களில்  மட்டும் பேசிக்கொள்ளும்
நம் நட்பு

எத்தருணமும் என்னை
தொடரும் நிழலாய்
உன் நட்பு

நலமா? சாப்பிட்டிங்களா?
என்ற இரு வார்த்தைகளில்
தன் மொத்த கரிசனையும்
காட்டி விடும் உன் நட்பு

உன் தமிழ் வரிகளில்
மூழ்கி போய் இருக்கிறேன்
உன் கவித்திறமையில்
பல தடவை வியந்திருக்கிறேன்

உன் அணைத்து கவிதைகளுக்கும்
முதல் ரசிகை நான் தான் நண்பா
இந்த இனிய உன் பிறந்தநாளில்
உன் பிறப்பில் நீ அனைத்தையும் பெற்று
உலகிற்கு பகிர்ந்து
நீயும் மகிழ்ந்து உலகையும்
மகிழவைக்க வாழ்த்துகிறேன் நண்பா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



Title: Re: பிறந்தநாள் வாழ்த்து
Post by: joker on June 26, 2018, 01:33:25 PM
எதையும் எதிர்பார்த்தல்ல நம் நட்பு
இந்த கவிதையும் நான் எதிர்பார்த்ததல்ல

எனக்காய் சிறு நேரம் ஒதுக்கி
கவிதையில் நம் நட்பை வெளிப்படுத்தி
வாழ்த்திய உங்களுக்கு
என் நட்பை தவிர
என்ன பரிசு தரமுடியும்

உங்களின் நட்பை எனக்கு குடுத்த
இறைவனுக்கு நன்றி

Title: Re: பிறந்தநாள் வாழ்த்து
Post by: DoRa on June 26, 2018, 07:44:51 PM
Nice Kavithai nIYA SIS
Title: Re: பிறந்தநாள் வாழ்த்து
Post by: LoLiTa on June 27, 2018, 06:07:01 PM
Niya sis azhagana kavidhai nanbanhku