கர்ம ஸ்தானம் – ராஜ்ஜிய ஸ்தானம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyourtamilastrology.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F02%2Fakshaya-patra.jpg&hash=aee61de1b48a068828b4a18e8093f7fb8b242e68)
ஜென்ம லக்னம் அல்லது ஜென்ம ராசியிலிருந்து பத்தாம் வீட்டிற்குப் பெயர் கர்ம ஸ்தானம். ஜீவன ஸ்தானம், ராஜ்ஜிய ஸ்தானம் என வேறு பெயர்களும் உண்டு. கர்மா என்றால் செயல்பாடு அல்லது ஆக்சன். தொழில் விற்பன்னர், தொழிலதிபர், தொழிற்சாலை, வேலை, வியாபாரம், பதவி, பட்டம், அரசியல், சித்தாந்த சொற்பொழிவாளர்கள், பெரிய அதிகார அந்தஸ்துள்ள அரசு பதவிகள், அரசியல் கட்சிகளின் தலைமைப் பதவி, குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில – மத்திய அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் பதவிகள், அரசு இயக்ககம், ஆணையம், வாரியத்தின் தலைவர்கள், விசாரமைக் கமிஷன், அதிகார மையம், அதிகார மைய தரகர்கள், பிரதமரின் தனித் தூதுவர்கள், வெளி நாட்டுத் தூதரகங்கள், நாட்டின் பிர பலஸ்தர்கள், கலைஞர்கள், நாடக நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விருது, பட்டம், வீதி, சாலை, நகரம், பொதுவிடங்கள், பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம், துறைமுகம், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு பெயர் மற்றும் சிலை வைக்கும் அளவில் பேர் – புகழ், அங்கீகாரம், அபரிமிதமான செல்வாக்கு, ஆண்டி அரசனாதல், நல்ல-தீய செயல்கள், கருணை, தெளிந்த – ஆழ்ந்த நுண்ணறிவு, கண்ணியம், சுயமரியாதை, சந்நியாசம், மதபோதகர்கள், எல்லாருக்கும் இனியர் முதலானவை பத்தாம் வீட்டின் காரகங்களகும்.
4,7,10-ஆம் வீடுகள் கேந்திரங்களாவதால் இதற்கு லட்சுமி ஸ்தானம் என்றும் பெயர். இந்த ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகள் விஷ்ணு, லட்சுமி ஸ்தானங்கள் என்றால் எளிதில் இந்த வீடுகளின் மேதாவிலாசமும் அதன் தனிப்பெரும் மகத்துவமும் தெரியவரும். மும்மூர்த்திகளில் விஷ்ணு பகவான் காக்கும் தெய்வம். முப்பெரும் தேவியர்களில் லட்சுமி செல்வத்திற்கு அதிபதி. இந்த இரண்டு வீடுகள் பலமானால் அந்த ஜாதகர் வீட்டில், காட்டில், வாகனத்தில் பணமழைதான். ஜாதகரின் பேர், புகழ் இந்த மண்ணுள்ளளவும், விண்ணுள்ளளவும் நிலைத்து நிற்கும்