FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 18, 2018, 12:16:30 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: Forum on June 18, 2018, 12:16:30 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 189
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM+UYIRAAGIRATHU%2F189a.png&hash=00969cc9010d6431ee5c8183bd461591e1444716)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: AshiNi on June 18, 2018, 10:36:56 AM
நட்பு! நட்பு! நட்பு!
  நட்பில்லா வாழ்வு வெறுமை
நண்பன்! நண்பன்! நண்பன்!
  நண்பனுள்ள வாழ்வு அருமை

நட்பின் மகிமையை
  என்னவென்று சொல்ல..?
பேனையும் மகிழ்ச்சியால்
  புன்னகைக்கிறது மெல்ல...

பள்ளிப் பருவமதில் கொள்ளும்
  நட்பின் சுகம்,
அள்ள அள்ளக் குறையாத
  கொள்ளை இன்பம்...

ஆடலுக்கும் பாடலுக்கும்
  இருந்ததில்லை பஞ்சம்
விளையாட்டு கிண்டல்களில்
  பொய்க்கோபங்கள் கொஞ்சம்
நண்பனின் குறும்புகள் கூடினால்
  ஓடோடி ஆசானிடம் தஞ்சம்
இன்று நினைத்தாலும்
  விழுந்து சிரிக்கிறது நெஞ்சம்

மழையிலும் வெயிலிலும்
  சேதாரமான குடையின் கீழ்
நண்பனின் தோளை அணைத்து
  ஆதாரமாய் தாங்கிச் செல்லும் சுகம்,
கோடிகள் கொட்டினாலும் கிடைக்கா
  நினைவுகளின் புதையல்கள்...

நண்பனுடன் இணைந்து
  வெட்டிக் கதைகள் பேசி
சாலையில் காட்சிகள் கண்டு
  துள்ளிச் சென்ற நாட்கள்,
கல்வெட்டில் பதித்து
  பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...

பணத்தின் அந்தஸ்து
  அறியாத நட்பு
நிறத்தின் பேதம்
  அறியாத நட்பு
ஜாதியின் பிரிவினை
  அறியாத நட்பு
பள்ளி நாட்களில்
  நாம் கொள்ளும் நட்பு...

வைகையாய் பெருக்கெடுத்த
  அந்த நட்பின் நாட்களை
எண்ணிப் பார்க்கையிலே
  விழிகளின் ஓரம் நீர்த்துளிகள்...
கண்ணீர்த்துளிகள் நனைத்தது
  என் கன்னங்களை மட்டுமல்ல !
பள்ளி நட்பிற்காக ஏங்கும்
  என் நினைவுகளை
வரிகளாக ஏந்தும்
  இக்கவிதை ஏட்டினையும் கூட...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: JeGaTisH on June 20, 2018, 03:27:56 PM
நட்பும் நண்பனும் நம்மை
நல்வழி படுத்துவதற்கே!
நாட்டுக்கு நாளை நல்லது முக்கியம்
நமக்கு நல்ல நண்பன் முக்கியம்!

தோள்கொடுத்து தோழமை பழக
தோழன் நீ அருகிலிருந்தால்
என்னை நோக்கி வரும்
வலிகள் எல்லாம் தொலைதூரம் ஓடிவிடும்.

தோழனே உனக்கு நான் உதவி எதுவும் புரியவில்லையே
ஏன் என்னை பிடித்தது உனக்கு.
பிடித்து வரும் நட்பை விட
பிறர் நாடா நட்பே சிறந்தது!

நான்கு பேரையாவது நண்பனாக்கிக்கொள்
நாளை உன் வாழ்க்கை வெளிச்சமாகும்
நடைபாதை இல்லாவிட்டாலும்
நான்ங்கு கால்கள் உன்னை தூக்கி செல்ல உதவும்!

உன் அருகில் இருக்கும் நண்பனை மறந்து
உறவுக்கு முக்கியம் கொடுத்தாய்
இறுதிவரை பலனை எதிர்பாராது வருவது நட்பு என அறியாமல்!

நட்பு இருக்கு மற்றது எல்லாம் எதுக்கு
கடவுள் தந்த வரம் உனக்கு!!!



  உங்கள் எல்லோர் அன்பு தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: thamilan on June 21, 2018, 01:54:43 PM
எனக்கு தந்தை இல்லை
தாயும் இல்லை
சகோதரனும் இல்லை
சகோதரியும் இல்லை
இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்த
ஒருவன் இருக்கிறன்
அவனே எனது நண்பன்

நான் தவறும் போதெல்லாம்
மனசாட்சியாக தட்டிக் கேட்பவன்
இது தந்தை செய்யும்   செயல்

நான் அழும் போதெல்லாம்
கண்ணீரை தாங்கிப் பிடிப்பவன்
இது  அன்னையின் செயல்

நான் துவண்ட போதெல்லாம்
தோள் கொடுத்து தூக்கியவன்
இது சகோதரனின் செயல்

எனக்கு காலில் அடிபட்டால்
வருத்தத்தில் கண்ணீர் வடிப்பவன்
இது  நண்பனின் செயல்

ஒரு தட்டில் என்னுடன்
ஒன்றாக சாப்பிடுபவன்
இது சகோதரியின் செயல்

 
தந்தைக்கு தந்தையாக தாய்க்கு தாயாக
சகோதரதனுக்கு சகோதரனாக
சகோதரிக்கு சகோதரியாக
நண்பனுக்கு நண்பனாக
ஒருவன் இருந்தால்
வேறென்ன வேண்டும் உலகினிலே

மலருடன் சேர்ந்த தென்றல்
மணம் பெறுகிறது
கடலுடன் சேரும் நதி நீர்
உப்பு கரிக்கிறது
நல்ல நண்பனைப் பெற்ற நானும்
பூவுடன் சேர்ந்த நாரைப் போல மணக்கிறேன்

தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது தட்டிக்கேட்பவனும்
எனது நண்பன்
அழகு இருந்தால் வருவேன்
என்றது காதல்
பணம் இருந்தால் வருவேன்
என்றது சொந்தம்
ஏதும் இல்லாமலேயே வந்தது
எங்கள் நட்பு

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும்
'விடுடா மச்சி பார்த்துக்கலாம்' என
நீ சொல்லும் ஒரு வார்த்தையில்
ஆயிரம் யானைகள் பலம் தோன்றுமே மனதில்


என் வெற்றியின் போது
பல சொந்தங்கள் என்னை சூழ்ந்திருந்தாலும்
என் தோல்வியின் போது என்கூட இருந்து
தோள் கொடுப்பவன் நீயல்லவா

 இன்னும் நூருபிறவிகள் எடுக்கவும் நான் தயார்
நீ என்றும் என் நண்பனாக வருவாயெனில்
 இந்த ஒரு பிறவி கூட போதும் எனக்கு
நூரு பிறவிகள் வாழும் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்
நண்பன் உன் துணை கொண்டு

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: சாக்ரடீஸ் on June 22, 2018, 11:10:02 AM

நட்பு
தமிழ் எழுத்துக்களால் வர்ணிக்க
முடியாத சொல்
வார்த்தைகளால்   வசப்படுத்த
முடியாத அர்த்தம் ....
அர்த்தம் இன்றிப் பேச 
முடியாத அற்புதமே
நட்பு ...

நட்பு
ஓர் அழகான ஓவியம்
என்னையே பிரதி   பலிக்கும்
என்னை நான் பார்க்கும் கண்ணாடி
நான் சிரித்தால் சிரித்து
நான் அழுதால்  அழுது
என்னோடு உறவாடும்
ஒரு அதிசய உறவு
யாருக்கும் எட்டாத
நெல்லி கனி என் நட்பு ....

இந்த  நட்பு   போன்ற
ஒரு உறவு
உடன் இருந்துவிட்டால் போதும்
கவலைகளும்
காயங்களும்
தொலை தூரம் தான்

என் நட்பு
தவறு செய்யும் போது
கண்டித்து
நல்லது செய்யும் போது
சூப்பர் என்று பாராட்டி
சுட்டித்தனம் செய்யும் போது
ரசித்து
அதிகம் பேசும் போது
கொல்லப்போறேன் சீனியர் என்று சொல்லி
கவலை பகிரும் போது
தோள் கொடுத்து
நான் கோவம் கொள்ளும் போது
சிரிப்பு கட்டாதிங்க சீனியர் என்று கூறி
என் அனைத்து
அலும்புகளையும்
ரசித்து சகித்து
லூசு சீனியர்  நீங்க என்று சொல்லும்
ஒரு நட்பு கிடைத்தால்
வாழ்க்கையில் என்றும்
சந்தோசமே ....
அப்படி பட்ட ஒரு நட்பு
என் நட்பு .....

சிலரை பார்க்கும்போது
இப்படி ஒரு பச்சோந்தி நட்பு தேவையா ??
என்று யோசித்த நாட்கள் பல
நிரந்தரம் இல்லா  உலகில்
நிறம் மாறும் உறவுகள்
மத்தியில்
சந்தோசம் அன்பு
வேண்டும் என்றேன்
என் கவலைகளைப்  பகிர
அழகான ஓர் நட்பு
ஆழமான ஓர் உடன்பிறப்பு
வேண்டும் என்றேன்
இரண்டும் கலந்த கலவையாய்
ஓர் உறவு
என் ஜூனியர் ....

என் தொல்லைகளை
பொறுத்துக்கொண்டு
என் தவுறுகளை
சுட்டிக்காட்டி
என்னை தங்கமாக
பாதுகாக்கும் ....
என் அன்பு தம்பி
ஜூனியர் சம்யுக்தா விற்கு
இந்த கிறுக்கல் 
சமர்ப்பணம் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: joker on June 22, 2018, 11:20:12 AM
கவலையில் இருக்கையில் சொன்னால் உதவி விட்டு செல்பவன் உறவுக்காரன்
ஆனால் தன் தோள் கொடுத்து உடன் இருப்பவன் நண்பன்

சிறிது காலம் நீடிக்கும் ரயில் பயண நட்பு
சிறுவயதில் தொடங்கி சிறகு விரித்து திசைமாறி பறந்தாலும்
நிலைத்து நிற்கும் நம் நட்பு

ஒற்றை ரூபாய் கொடுத்து வாங்கிய மிட்டாயாயினும்
பகிர்ந்துண்ண கற்றுக்கொடுத்தது நம் நட்பு

வார விடுமுறையில் கண்டுகளித்த விஷயங்களையும்
ஆண்டு விடுமுறையில் தாத்தா பாட்டியிடம் சென்று
அவர்கள் சொன்ன கதைகளையும் உன்னை சந்தித்த மறுகணம்
பகிரவே துடித்து கொண்டிருக்கும் என் மனம்

பள்ளிமுடிந்தும் வீடு செல்லாமல் உன்னுடன்
இருக்கவே விரும்பும் என் மனம்

அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம்
பேசாமல் இருப்போம் இரவு கடக்கும் வரை மட்டும்
மறுநாள், புதிய நாளாய் தொடங்கும் நம் நட்பு

மதிய உணவு இடைவேளையில் உனக்கு
சோறு ஊட்டிய தாய்
அதே தாயன்புடன்  எனக்கும் ஊட்டுகையில்
கண்கலங்கியதுண்டு  நம் நட்பை எண்ணி

வெளியில் மழை பெய்கையில்
அதை ரசிக்க ஜன்னலோர இருக்கைக்கு
போட்டிபோட்டது என்றும் மலரும் நினைவுகள்
நம் வாழ்வில்

இதோ,

மழை பெய்கிறது, இருவரிடம் தனித்தனியே
குடை இருந்தும் ஒரே குடையில்
கதை பேசி நடக்கையில்
நனைகிறது மண்ணும் மனமும்

நட்பை நேசிப்போம் வாழ்க்கையை ரசிப்போம்


***ஜோக்கர் ****



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: NiYa on June 22, 2018, 03:08:03 PM
உன்னை சந்தி்த்து இன்றுடன்
இருபது ஆண்டுகள் கடந்தும்
அன்று போல் இன்றும் அதே அன்பில் பிரியாமல் என்னுடன் இருப்பவள்

ஒரே பள்ளியில் படிக்கவில்லை
ஒரே கல்லூரி செல்லவில்லை
இருந்தும் அவளுக்குக் எனக்குமான
நெருக்கம் குறையவும் இல்லை

அயல் வீட்டு அறிமுகம் தான்
இப்போது ஆருயிர் நட்பானது
உன் வீடும் என் வீடும்
இருவருக்கும் பொதுவானது

எம்மிடையே இரகசியங்கள்
இதுவரை இருந்ததது இல்லை
எந்தவிதமான சோகமும்
உன் தோள் சாய்ந்ததும் மறந்து போகும்

 
மனதளவில் மட்டும் அல்ல
உருவவியலில் நானும்
அவளும் ஒன்றுதான்
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி அவள் தான்

ஒரு நண்பியாய், சகோதரியாய்
சகோதரனாய், வழிகாட்டியாய்
ஆசிரியராய், அன்னையாய்
தந்தையாய் ஆனாய்

என் வாழ்வில் கடவுள்
தந்த வரம் நீ தான்
எப்போதும் உன்னை
பிரியா வரம் வேணும்


என் ஆருயிர் தோழிக்கு  சமர்ப்பணம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 189
Post by: SweeTie on June 22, 2018, 07:15:39 PM
மழையில் நனைந்தோம் ஒரு குடைக்குள்
மாலையில்  சேர்ந்து விளையாடி மகிழ்ந்தோம்
தோழோடு தோழ்  சேர்த்து நடந்தோம் 
தோழர்கள் என்னும் பெயரும் கொண்டோம்

ஜாதிகள் மதங்கள்  கடந்து நின்றோம்
பேதங்கள் இல்லாத உலகம் கண்டோம்
வேதங்கள் அனைத்தும்  போற்றும் அன்பை
வாதங்கள் செய்து  கெடுக்கின்றனர் 

ஒரு தாய் வயிற்றில்  பிறக்கவில்லை -
ஒன்றாய்  பகிர்ந்து உண்ணுகின்றோம்
ஒருவர்  தடம் மாறித்  தடுமாறும்  போது 
ஒருவர்  தாங்கிப் பிடிக்கும்  தூணாவோம்

உப்பு இல்லாத உணவில்  சுவையில்லை
நட்பு இல்லாத  உறவில் சுகம் இல்லை
சிற்பி  செய்யாத சிலையும் அழகில்லை
கற்பு இல்லாத பெண்டிரும் களையில்லை

விட்டுக்கொடுப்பது நட்புக்கு  அணிகலன்
கட்டுப்படுவது அன்புக்கு இலக்கணம்
கற்றுக்கொடுப்பது அறிவுக்கு அளவுகோல்
பட்டுத் தெறிப் பது  பாவத்தின்  பின்னணி