FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 07:03:41 AM

Title: நன்றியுரை -2
Post by: aasaiajiith on March 15, 2012, 07:03:41 AM
என்  வரிகள் எனும்  விளக்கிற்கு  வெள்ளந்தியாய்
 விமர்சனம்  எனும்  திரியிட்டாள் ஒரு  தையல்  ( பெண் )


தன் வாடிக்கையான  ,வேடிக்கை  நிறைந்த ,
அதே  சமயம்  வசீகரிக்கும்  விமர்சனத்தால்
விளக்கின்  உயர்  விளிம்பு  வரை  விளக்கெண்ணை  விட்டாள்  ஒரு   மயில் 

எல்லாவற்றிற்கும்  முத்தாய்ப்பாய் ,அடிப்படையாய் , வெளிபடியாய்
தன்  கருத்தை  விமரிசனமாய்  வெளிபடுத்தி    விளக்கே ஏற்றினால்  ஒரு  வெள்ளிநிலா 

உங்கள்  வாழ்த்துக்களுக்கு  ஒரு  "காளை" யின்  காலை வணக்கம் "
Title: Re: NANDRIYURAI 2
Post by: supernatural on March 15, 2012, 02:52:25 PM
புதுமையான சிந்தனையை ..
அழகிய வார்த்தைகளால்    ...
கூரிய வரிகள் புனைந்து ..
உன் தமிழ் திறனால் ...
 கவித்திறனால் ....
வரிகளுக்கு  உயிர் கொடுத்து ...
தமிழுக்கு பெருமை சேர்க்கும் ...
பெரும் கவிஞன்  நீ ....
Title: Re: நன்றியுரை -2
Post by: RemO on March 21, 2012, 09:27:22 AM
ena mams:D entha payanum unga kavithaiya paratalaya apa:D ungaluku elam ladies fan thana :D

natural unga kavithai nice, ungal kavithaiyum tamilukku perumai serkuthu